சீன வீரர்களுடன் நள்ளிரவில் 20 மணி நேரம் போரிட்டோம்

சீன வீரர்களுடன் நள்ளிரவில் 20 மணி நேரம் போரிட்டோம்'


 


14-08-202


 


புதுடில்லி: 'சீன வீரர்களை எதிர்த்து, நள்ளிரவில் 20 மணி நேரம் கடுமையாக போரிட்டோம்' என இந்தோ - திபெத் எல்லை காவல் படை தெரிவித்து உள்ளது.



கடந்த ஜூன் 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த நாட்டு ராணுவம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

இதனையடுத்து, எல்லையில் இருநாடுகளும் படைகளை குவிக்க பதற்றம் நிலவியது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்தையில், எல்லைகள் படைகள் விலக்க ஒப்புதல் தெரிவித்ததையடுத்து அமைதி திரும்பியது.


 



இந்நிலையில், சீன வீரர்களை எதிர்த்து, நள்ளிரவில் 17 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை கடுமையாக போரிட்டதாக இந்தோ - திபெத் எல்லை காவல் படை தெரிவித்து உள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்தியில் தெரிவித்ததாவது: தற்காப்புக்காக சீன வீரர்களை கடுமையாக தாக்கி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தோம்.

வீரர்கள் திறம்பட போரிட்டதுடன், காயமடைந்த நமது வீரர்களையும், அங்கிருந்து பின்னுக்கு கொண்டு வந்தனர். கல்வீசி தாக்கிய சீன வீரர்களுக்கு தக்க பதிலடி தரப்பட்டது. ஒரு நாள் இரவு முழுவதும் சீன வீரர்களுடன் போரிட்ட போதும், நமது வீரர்கள் குறைந்த அளவில் தான் காயமடைந்தனர். சீன வீரர்களை எதிர்த்து அந்த இரவு முழுவதும் 17 முதல் 20 மணி நேரம் கடுமையாக போரிட்டோம். இவ்வாறு இந்தோ - திபெத் எல்லை காவல் படை தெரிவித்துள்ளது



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி