சிறுகமணி பேரூராட்சியில் 15.08.2020 ம் தேதி 74 வது சுதந்திர தின விழா
, திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சியில் 15.08.2020 ம் தேதி 74 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு செயல் அலுவலர் தலைமையில் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் , சுயஉதவிக்குழு பணியாளர்கள் மற்றும் பரப்புரையாளர்களை கொண்டு பேரூராட்சி அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது
. மேலும் பழைய அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றப்பட்டது.இவ்விழாவில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை முழுமையாக மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் சார்பாக பொருள்கள் வழங்கப்பட்டது.
இந்த 74 வது சுதந்திர தினவிழாவில் பேரூராட்சிக்குட்பட்ட 13 வது வார்டு வள்ளுவர் நகர் காந்தி பூங்கா, இந்திரா சுந்தர் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகம், பெட்டவாய்த்தலை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகம், காந்திபுரம் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது
முகிலன் செய்தியாளர்
கரூர்
Comments