பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்
பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு
ஆக 06, 2020 22:51
சென்னை: கொரோனா வைரஸை குணப்படுத்துவதாக கூறி மக்ககளின் அச்சத்தைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது
'கொரோனில்' என்ற பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி பதஞ்சலி நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி .சி.வி.கார்த்திகோயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீண்டும் உறுதி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். 'கொரோனில் 92 பி' என்ற பெயரை பதஞ்சலி நிறுவனம் கடந்த ஜூன் 1993ம் வருடம், அமிலத்தை கட்டுப்படுத்தும் மருந்தாக பதிவு செய்துள்ளது. 1993ம் வருடம் பதிவு செய்யப்பட்ட மருந்தினை, மக்களுடைய கொரோனா அச்சத்தை பயன்படுத்தி இது எதிர்ப்பு சக்தியை கூட்டும் என சொல்லி தங்களுடைய தயாரிப்பை சந்தைப்படுத்தி உள்ளது.
இதனால் மக்களுடைய அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயற்சித்ததற்காக ரூ 10 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தி மருந்து தானே தவிர கொரோனாவை அது குணப்படுத்தாது' இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Comments