தொப்புள் கொடி மூலம் கர்ப்பப்பையில் இருந்த குழந்தைக்கு பரவிய கொரோனா
தொப்புள் கொடி மூலம் கர்ப்பப்பையில் இருந்த குழந்தைக்கு பரவிய கொரோனா
ஜூலை 28, 2020
புனே: நாட்டில் முதல்முறையாக, புனே மருத்துவமனையில், தாயின் கருவில் இருந்த குழந்தைக்கு, தொப்புள் கொடி மூலம் கொரோனா தொற்று பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புனே சாசூன் பொது மருத்துவமனையில், கொரோனா அறிகுறிகள் தென்படாத தாயிடமிருந்து, தொப்புள் கொடி வழியாக, கர்ப்பப்பையில் உள்ள குழந்தைக்கு பிரசவத்திற்கு முன்பே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். கர்ப்பிணிக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா முடிவுகள் 'நெகடிவ்' என வந்த நிலையில், குழந்தை பிறந்த பின், பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி, சளி ஆகியவற்றை சோதனை செய்ததில், குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு வாரங்களில் குழந்தை குணமானதையடுத்து, தாயும், சேயும் டிஸ்சார்ஜ் செய்ப்பட்டனர். இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments