கொரோனாவுக்கு எதிரான போரில் புத்தரை நினைவுகூர்ந்த ஐ.நா. சபை
கொரோனாவுக்கு எதிரான போரில்புத்தரைநினைவுகூர்ந்த ஐ.நா. சபை04-07-2020 புத்தர்பிரானின் போதனைகள், கொரோனாவுக்கு எதிரான போரில் நாடுகளும், மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதை நினைவுபடுத்துவதாக ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். புத்தர் நியுயார்க்:
அதில் அவர் கூறி இருப்பதாவது:- கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இந்த காலகட்டத்தில், புத்தர்பிரான் வலியுறுத்திய ஒற்றுமையும், பிறருக்கு சேவை செய்வதும் முன் எப்போதையும் விட இப்போது முக்கியமானது. உலகளாவிய ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று நோயின் சமூக, பொருளாதார விளைவுகளை நாடுகளால் சமாளிக்க முடியும். புத்தர்பிரானின் போதனைகள், கொரோனா வைரஸ் விடுக்கிற சவால்களை சந்திப்பதற்கு நாடுகளும், மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதை நினைவுபடுத்துகின்றன. நாம் நமது ஆற்றல்களையும், நிபுணத்துவத்தையும் இணைப்பதின்மூலம் மட்டுமே இன்று நம் உலகில் உள்ள மிகப்பெரிய பலவீனங்களை சரி செய்ய முடியும். சர்வதேச ஒத்துழைப்பின்மூலம் மட்டுமே பொருளாதார, சமூக பாதிப்புகளை எளிதாக்குவோம். |
Comments