பால் கேசரி

பால் கேசரி


ஜூலை 18, 2020 16:01


எளியமுறையில் சூப்பரான சுவையில் பால் கேசரி



பால் கேசரி


தேவையான பொருட்கள் :
பால் - 200  மில்லி லிட்டர்,      முந்திரி - 2 தேக்கரண்டி


சர்க்கரை - 100 கிராம் ,   ஏலக்காய் - 7
வெள்ளை ரவை - 100 கிராம்,    நெய் - 30 மில்லி
கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - 2 தேக்கரண்டி
பாதாம் பருப்பு – 2,      பிஸ்தா – 2,    செர்ரி பழம் - 2


 


 


 



செய்முறை:

வாணலியில் சிறிது நெய் விட்டு ரவையை நிறம் மாறாமல் சிம்மில் வைத்து வறுத்துக் கொள்.     மற்றொரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி,  திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து தனியாக வை.

மற்றொரு வாணலியில் பால் சேர்த்து காய்ச்சியதும் வறுத்த ரவை, தட்டிய ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.

பால் வற்றி ரவை வெந்த பிறகு,  சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறு. சர்க்கரை உருகி, கேசரி பதத்துக்கு ரவை வந்த பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கு.

இதில் பாதாம் பருப்பு, பிஸ்தா, செர்ரியை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு:

கேசரிக்கு நிறம் வேண்டுமென்றால், பாலுடன் ஒரு சிட்டிகை குங்குமப்பூவைச் சேர்


அல்லது கேசரி மீது ஒரு சிட்டிகை குங்குமப் பூவைத் தூவு.


 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி