திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டுக்கு சீல்
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு டெலிவரிக்கு பிறகு கரோனா தொற்று உறுதியானதால் பிரசவ வார்டு மூடப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தங்களை தாங்களே தனிமைபடுத்திக்கொண்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு அவருக்கு கரோனா பரிசோதனை டெஸ்ட்டுக்கு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆபரேஷன் மூலம் குழந்தை பிரசவம் நடந்த பிறகு கரோனா டெஸ்டில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
உடனடியாக அந்த பெண் மற்றும் குழந்தையை திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைச்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதையடுத்து அப்போது பணியில் இருந்த டாக்டர்கள் , செவிலியர்கள் , பணியாளர்கள் விடுப்பு எடுத்து தங்களை தனிமைபடுத்திக்கொண்டுள்ளனர். இதையடுத்து பிரசவ வார்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
Comments