ஸ்வப்னா சுரேஷ் கைது

கேரள தங்க கடத்தல் வழக்கு: பெங்களூருவில் ஸ்வப்னா சுரேஷ் கைது


மூணாறு: கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்வப்னா பெங்களூருவில் அவரது குடும்பத்தினருடன் பதுங்கியிருந்த போது அவரை என்.ஐ.ஏ. போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்கள் ஷரீத், கேரள தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா ஆகியோருக்கு கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஷரீத் கைதான நிலையில் ஸ்வப்னா தலைமறைவாக உள்ளார்.


அவரை தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில் இன்று பெங்களூருவில் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டதாகவும்நாளை (ஜூலை 12) கேரளாவில் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி