டீக்கடைக்காரர்  ரூ. 50 கோடி         கடன் பாக்கி

டீக்கடைக்காரர்  ரூ. 50 கோடி


        கடன் பாக்கி


அதிர்ச்சி தந்த அரியானா  வங்கி



குர்கான்: ரூ. 50 ஆயிரம் கடன் கேட்டு வங்கியை அணுகிய டீக்கடைக்காரரிடம் ஏற்கனவே நீங்கள் ரூ. 50 கோடி கடன் பாக்கி வைத்துள்ளீர்கள் என வங்கி நிர்வாகம் கூறிய சம்பவம் நடந்துள்ளது.



அரியானா மாநிலம் குருக்க்ஷேத்ராவைச் சேர்ந்தவர் ராஜ்குமார், அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தனது டீக்கடையை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டது. தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.


மீண்டும் டீக்கடையை திறக்க வேண்டி, ரூ. 50 ஆயிரம் கடன் கேட்டு வங்கி ஒன்றிற்கு மனு செய்திருந்தார். அவரது பெயர் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்த வங்கி அதிகாரிகள், நீங்கள் ஏற்கனவே வங்கியில் ரூ. 50 கோடி கடன் வாங்கி யுள்ளீர்கள். உங்களுக்கு அது தெரியாதா, இப்போது மேலும் கடன் கேட்டால் எப்படி தரமுடியும். முதல்ல ரூ. 50கோடி கடன் பாக்கிய கட்டுங்க என கூறி ராஜ்குமாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.


உடனே ராஜ்குமாருக்கு தூக்கி வாரி போட்டது. சாதாரண டீக்கடை வைத்துள்ள நான் இதுவரை எந்த வங்கியிலும் கடன் வாங்கியது கிடையாது அப்படியிருக்க எப்படி ரூ. 50 கோடி வங்கி கடன் வாங்கினேன் என எனக்கே தெரியவில்லை என்றார்.



 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி