தனியாரிடம் செல்லும் அரசு வங்கிகள் வங்கிகளை 5 ஆக குறைப்பு
தனியாரிடம் செல்லும் அரசு வங்கிகள்; வங்கிகளை 5 ஆக குறைக்க அரசு திட்டம்?ஜூலை 21, 2020 புதுடில்லி: இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளை 5 வங்கிகளாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதல்கட்ட நடவடிக்கையாக, சில வங்கிகளின் பங்குகளை தனியார் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பொதுத்துறை வங்கியின் மூத்த அதிகாரி, ‛இனிமேல் வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதால், வங்கிகளின் பங்குகளை விற்க உள்ளதாகவும், நான்கு அல்லது ஐந்து பொதுத் துறை வங்கிகள் இருந்தால் போதும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும்,' கூறினார்.
|
Comments