நில அளவை கட்டணம் 40 மடங்கு உயர்வு
நில அளவை கட்டணம் 40 மடங்கு உயர்வு
நிலம் எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூ50ல் இருந்து ரூ2 ஆயிரம் ஆனது மேலும், நிலத்தை அளந்த போது, எதுவும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் மறு அளவீடு கோரியும் விண்ணப்பிக்கவும் செய்கின்றனர். மேலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படும் புல அளவீட்டு புத்தகப்பிரதி, புல எல்லைகளை சுட்டிக்காட்டும் பக்க எல்லை, மாவட்ட வரைபடம், வட்ட வரைபடம், நகரம் பிளாக் படங்கள், கிராம வரைபடம் ஆகியவை தரப்படுகிறது. இதற்காக நில அளவைத்துறை சார்பில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இக்கட்டணத்தை உயர்த்த நில அளவைத்துறை முடிவு செய்தது. அதன்பேரில் மத்திய நில அளவை அலுவலக இணை இயக்குனர் தலைமையில் ஆலேசானைக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படும் கிராம வரைபடங்கள் கட்டணம், உட்பிரிவு, புல எல்லை அமைத்தல், புலப்பட நகல் வழங்குதல் உள்ளிட்டவைக்கு கட்டணம் உயர்த்த பரிந்துரை செய்தது. |
Comments