ஓபிசி இடஒதுக்கீடு குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்

ஓபிசி இடஒதுக்கீடு குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்- மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


ஜூலை 27, 2020


மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாதங்களில் முடிவெடுக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


சென்னை ஐகோர்ட்


புதுடெல்லி:


 


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.


 


இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு, திமுக, அதிமுக, திராவிடர் கழகம், பாமக, மதிமுக, நாம் தமிழர், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 


 


இந்த வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும், இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு இந்திய மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைத்து 3 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


 


‘மாநில மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை. ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்யும் என்ற மருத்துவ கவுன்சில் விளக்கத்தை ஏற்க முடியாது. மாநிலங்கள் வழங்கிய இடங்களை மத்திய கல்வி நிறுவனங்களில் அமல்படுத்த ஆட்சேபிக்காதபோது தற்போது மட்டும் எதிர்ப்பது ஏன்?’ என்றும்  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி