இன்றும் நாளையும் (ஜூலை 11, 12) வானில் வால்நட்சத்திரம் தெரியும்
Turn off for: Tamil
வானில் தோன்றும் வால்நட்சத்திரம்
வெறும் கண்களால் காணலாம்
ஜூலை 11, 2020 12:36
புதுடில்லி: இந்தியா முழுவதும் இன்றும் நாளையும் (ஜூலை 11, 12) வானில் வால்நட்சத்திரம் தெரியும் என்றும் இவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் நாசா அறிவித்துள்ளது.
வானில் அவ்வபோது அதிசயம் நிகழ்ந்து வருகிறது. அந்தவகையில், இந்தியாவில் இன்றும் நாளையும் வானில் வால்நட்சத்திரம் தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. நியோவைஸ் அல்லது கோமெட் 2020 என பெயரிடப்பட்டுள்ள இந்த வால்நட்சத்திரத்தை இந்தியாவில் வெறும் கண்களால் காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று அதிகாலை நேரத்தில் மிக உயரத்திலும், நாளை மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பிறகு வடமேற்கு அடிவானத்தில் தெரியும்.
பூமிக்கு அருகில் பெரிய அளவில் புறஊதா கதிர்களின் ஆற்றல் பரவல் என்பதை குறிக்கும் வகையில் இதற்கு நியோவைஸ் என பெயரிட்டுள்ளதாக நாசா கூறுகிறது. முதன் முதலில் பிரான்ஸ் நாட்டின் மாண்ட்லுகன் பகுதியில் கடந்த 8ம் தேதி சூரியன் மறைந்த பின்னர் மாலை நேரத்தில் வால் நட்சத்திரம் தெரிந்துள்ளது. இந்த காட்சியை நாசா வெளியிட்டுள்ளது. அதேபோல், அமெரிக்கா, இத்தாலி, வடக்கு அயர்லாந்து பகுதிகளிலும் தெரிந்துள்ளது.
நியோவைஸ் வரும் 22ம் தேதி பூமிக்கு மிக அருகில் சுமார் 103 மில்லியன் கி.மீ தொலைவில் இருக்கும். கடந்த மார்ச் 27ம் தேதி நாசாவின் எக்ஸ்போரர் தொலைநோக்கி மூலமாக கண்டறியப்பட்ட இந்த வால்நட்சத்திரம், கடந்த 3ம் தேதி சூரியனுக்கு அருகில் 43 மில்லியன் கி.மீ தூரத்தில் கடந்து சென்றது. இது சூரியனுக்கும் புதன் கோளுக்கும் இடையிலான சராசரி தூரத்தை விட குறைவானதாகும்.
வால்நட்சத்திரமானது அதன் நீளமான சுற்றுப்பாதையை முடிக்க சுமார் 6800 ஆண்டுகள் ஆகும். எனவே இதை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பார்க்க முடியாது
Comments