ஆட்டோ ஒட்டுனர்களுக்கு சென்னை கொளத்துர் பூம்புகார் நகர் நலசங்கம் நிவாரணம்
கொரானாவினால் ஊரடங்கு அமுலில் உள்ளதால் பல பாதிக்கப்பட்ட தொழில்களில் ஆட்டோ ஓட்டுதலும் ஓன்று
அவர்களின் தினசரி வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளது
இந்த நிலையில் சென்னை கொளத்துர் பூம்புகார் நகர் குடியிருப்போர் நல சங்கம் இன்று23.6.2020 காலை அந்த நகரிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சுமார் ரூ 500/-. மதிப்புள்ள 10 கிலோ கொண்ட அரிசி பையை வழங்கினார்கள்
சங்க தலைவர் திரு கன்னியப்பன் முன்னிருந்து நடத்தி வழங்கினார்.சங்கத்தின் செயலர் திரு ராமதாஸ் மற்றும் திரு ராமசாமி பொருளாளர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்‘நங்கத்தின்அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகளுக்கும் மற்றும் அனைத்து ஆட்டோ ஒட்டுனர்களுக்கும் கொரானா நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஓமியோபதி மருந்தான அர்சானிக் அல்பம் 30 வழங்கப்பட்டது
இதனை சங்க நிர்வாகியான திரு தியாகராஜன் ஏற்பாடு செய்து தனது பங்காக வழங்கினார்
பீப்பிள் டுடே சிறப்பு ஆசிரியர் திரு என் .எஸ்.உமாகாந்தன் சிறப்பு அழைப்பாளராக இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்
புகைப்படங்கள் ,செய்தி
--அமிர்தலிங்கம் ,செய்தியாளர்
Comments