இசை கொடுத்த கொடை

#மெல்லிசை_மன்னர் 
#எம்எஸ்விஸ்வநாதன் 
அவர்களின் பிறந்த தினம்...


கேரளாவில் பிறந்தவர் 1928ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி கேரள மாநிலம், பாலக்காட்டில் பிறந்தவர் எம்.எஸ்.வி., 


இவரது முழுப்பெயர் மனையங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன். இதை தான் இவர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று சுருக்கி கொண்டார்.


13 வயதில் மேடை சங்கீதம் சிறு வயதிலேயே தந்தையை இழந்து மிகவும் கஷ்டப்பட்ட எம்.எஸ்.வி., நீலகண்ட பாகவதரிடம் முறைப்படி சங்கீதம் கற்றார். 


தனது 13வது வயதில் மேடையில் முதல் கச்சேரி செய்தார். எம்.எஸ்.விக்கு சினிமாவில் ஒரு பாடகராகவும், நடிகராகவும் தான் வர ஆசை. 


அதன்காரணமாக ஆரம்பகாலத்தில் நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கவும் செய்தார்.


டி.கே.ராமமூர்த்தியின் நட்பு..


இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா மூலம், எஸ்.வி.வெங்கட்ராமனிடம் அறிமுகப்படுத்தப்பட்டு பணி அமர்த்தப்பட்டார். 


அதன்பின்னர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சி.ஆர்.சுப்பாராமன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார். 


இந்த காலக்கட்டத்தில் வயலின் இசை கலைஞரான டி.கே.ராமமூர்த்தியின் நட்பு கிடைத்தது. 


எதிர்பாராதவிதமாக 1952-ல் ‘சி.ஆர்.சுப்பாராமன் இறக்க நேரிட, அவர் பணியாற்றி வந்த தேவதாஸ், சண்டிராணி, மருமகள் போன்ற படங்களுக்கு பின்னணி இசையமைப்பாளர்களாக இந்த இரட்டையர்கள் தொடர்ந்தனர்.


தொடங்கி வைத்த ”பணம்”!
இவர்களின் திறமையை அறிந்த என்.எஸ்.கிருஷ்ணன், தனது சொந்த படமான ”பணம்” படத்திற்கு இவர்களை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார்.


#விஸ்வநாதன்_ராமமூர்த்தி 
பெயர் வந்தது எப்படி....


பணம் படத்திற்கு விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட பின், இசையமைப்பாளர் பெயரில் ராமமூர்த்தி – விஸ்வநாதன் பெயர் வர வேண்டும் என விஸ்வநாதன் விரும்பினார். 


காரணம், ராமமூர்த்தி வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர் என்பதால் இதை விரும்பினார். 


ஆனால் என்.எஸ்.கிருஷ்ணனோ, வயதிலும், அனுபவத்திலும் மூத்தவரான ராமமூர்த்தி உன் பின்னால் இருப்பது உன்னை தாங்கி பிடிப்பது போன்ற ஒரு வலிமையை கொடுக்கும் என்ற காரணத்தினால் விஸ்வநாதன் பெயரை முன்பும், ராமமூர்த்தியின் பெயரை பின்னாலும் இணைத்தார் என்.எஸ்.கே.
சென்ஞ்சுரி அடித்த இரட்டையர்கள்


1952ம் ஆண்டு பணம் படத்தில் துவங்கிய இந்த இரட்டையர்களின் வெற்றி கூட்டணி 1965ம் ஆண்டு வரை தொடர்ந்தது. 


இருவரும் சேர்ந்து இந்த 13 ஆண்டுகளில், 100 படங்களுக்கு மேல் இசையமைத்தனர். 


இவர்கள் கடைசியாக இசையமைத்து மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம், எம்.ஜி.ஆர். உடன் ஜெயலலிதா இணைந்த முதல்திரைப்படமான, இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் பிரமாண்ட தயாரிப்பான ”ஆயிரத்தில் ஒருவன்”. 


இதன் பின்னர் இருவரும் தனித்தனியாக இசையமைக்க தொடங்கினர்.
30 ஆண்டுகள் எம்.எஸ்.வி.யின் இசை ராஜ்யம்


விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து 700 படங்களுக்கும், இவர் தனியாக, 500 படங்கள் என, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என, 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். 


1951 முதல் 1981 வரை, 30 ஆண்டுகள், தமிழகத்தில், அவரது இசை ராஜ்யம் தான் நடந்தது.


எம்.எஸ்.விக்கும். ஏ.ஆர். ரஹ்மான் இருவருக்கும் ஒரு ஒற்றுமை ,இருவரும் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்கள். தங்கள் முயற்சியால் முன்னுக்கு வந்தவர்கள்.


மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து சில படங்கள் பணியாற்றியுள்ளார். 


அதன் விபரம்….


மெல்ல திறந்தது கதவு
செந்தமிழ் பாட்டு
செந்தமிழ் செல்வன்
விஷ்வ துளசி
எம்.எஸ்.வி. ,டி.எம்.எஸ், பி.பி.எஸ், சுசிலா,ஜானகி எஸ்.பி.பி.,சிவாஜி , எம்.ஜி.ஆர்.என மூன்றெழுத்து சாதனையாளர்கள் 80கள் வரையும் சிலர் அதையும் தாண்டியும் தமிழ் திரையுலகை கையில் வைத்திருந்தனர். எம்.எஸ்.விஸ்நாதன்
பணியாற்றிய ஜாம்பவான்கள்…
 
நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு… உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


#இயக்குநர்கள்..


ஏ.எஸ்.ஏ.சாமி, டி.பிரகாஷ் ராவ், கிருஷ்ணன் பஞ்சு, பி.ஆர்.பந்தலு, ஏ.பி.நாகராஜன், ஏ.பீம்சிங், பா.நீலகண்டன், ஸ்ரீதர், ராமண்ணா, ஏ.சி.திரிலோகசந்தர், முக்தா சீனிவாசன், கே.சங்கர், பி.மாதவன், கே.பாலசந்தர், கே.எஸ்.கோபால கிருஷ்ணன், கே.பாக்யராஜ், விசு, எஸ்.ஏ.சந்திரசேகர் போன்ற ஜாம்பவான் இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


#தயாரிப்பு நிறுவனங்கள்...


ஜூபிட்டர் பிக்சர்ஸ், ஏ.வி.மெய்யப்ப செட்டியார், ஜெமினி பிக்சர்ஸ் எஸ்.எஸ்.வாசன், பி.ஆர்.பந்தலு, ஏ.பி.நாகராஜன், முக்தா சீனிவாசன், கவிதாலயா, கே.பாலாஜி போன்ற பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்களின் படைப்புகளுக்கு இசையமைத்து இருக்கிறார்
கண்ணதாசன் – எம்.எஸ்.வி., கூட்டணியில் உருவான முக்கியமான பாடல்கள்!
 
#கண்ணதாசன் – விஸ்வநாதன்...


ராமமூர்த்தியின் கூட்டணியில் அமைந்த பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத காவிய பாடல்களாக இன்றும் திகழ்கின்றன. 


உதாரணத்திற்கு கர்ணன் பட பாடல்கள். பொதுவாக இசையமைப்பாளர்கள், கவிஞர்களிடம் மெட்டுக்கு ஏற்றபடி பாடல் வரிகளை மாற்ற சொல்லி கேட்பார்கள்..



ஆனால் விஸ்வநாதனோ, கண்ணதாசனின் பெரும்பாலான பாடல் வரிகளை அப்படியே தன் மெட்டிற்குள் புகுத்தி, சொல்ல வந்த கருத்தை கவித்துவம் மாறாமல் தன் இசை கோர்ப்பால் அழகு சேர்த்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்றால் மிகையல்ல.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி