இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள்!
வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள்!
எந்தவிதமான சகுன தோஷமும் உங்களை தாக்காது.!! கணவர், வெளியே செல்லும் போது மனைவி, உடன் சென்று வழி அனுப்பி வைப்பதுதான் மிகவும் சரியான முறை. அப்படி சந்தோஷமாக, நல்ல முறையில் வழி அனுப்பி வைக்கும் பட்சத்தில், கணவர் சென்ற காரியம் நிச்சயம் வெற்றிதான். வீட்டில் இருக்கும் மனைவியே மகாலட்சுமியின் அம்சம்
. தினந்தோறும் அலுவலகத்திற்கு செல்லும் கணவராக இருந்தாலும் கூட, அவரின் அலுவலக பணிகள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், சுமூகமாக செல்வதற்கு, மனைவி வழி அனுப்பி வைப்பது சிறப்பு. மனைவியின் முகத்தை பார்த்து விட்டு சென்றால், கட்டாயம் அதிர்ஷ்டம் தான்.
ஒரு குடும்பமானது மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருக்கும் பட்சத்தில், அக்கம்பக்கம் இருப்பவர்களின் கண்திருஷ்டி, கட்டாயம் படாமல் இருக்காது. துளசி_செடியை பற்றி நமக்கு தெரியாத மகத்துவமே கிடையாது. ஆனால், அந்த துளசி செடிக்கு இப்படி ஒரு அபூர்வ சக்தி இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? நாம் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்பாக, நம்முடைய மனதை ஒரு நிலைப்படுத்தி, துளசிச் செடியை 15 வினாடிகள் பார்க்க வேண்டும்
. அதாவது துளசிச் செடியை அந்த பசுமை நிறத்தை, அழகான தோற்றத்தை உங்கள் மனதிற்குள் உள்வாங்கிக் கொண்டு, கண்களை மூடி ஒரு நிமிடம் துளசி தேவியை வேண்டி கொண்டு, வீட்டில் இருந்து செல்லும் பட்சத்தில், உங்களுக்கு ஏற்படும் எப்படிப்பட்ட சகுன தோஷமாக இருந்தாலும் சரி, யாருடைய பெரும் மூச்சாக இருந்தாலும் சரி, கெட்ட எண்ணமாக இருந்தாலும் சரி, அந்த தோஷம் உங்களையும் உங்களது வீட்டையும் தாக்கவே தாக்காது என்று சொல்லப்பட்டுள்ளது.
இது ஒரு சுலபமான முறை தான். ஆனால், உங்களுடைய வீட்டில் துளசிச் செடி, ஒரு சிறிய தொட்டியிலாவது வைத்து, நீங்கள் பராமரிக்க வேண்டியது அவசியம். உங்களால் முடியும் பட்சத்தில் இதை பின்பற்றிப் பாருங்கள், உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் வெகுவாக குறைவதை உங்களால் உணர முடியும். உங்களுடைய வீட்டில் இருக்கும் ஆணுடைய வெற்றியாக இருந்தாலும், பெண்ணுடைய வெற்றியாக இருந்தாலும் எந்த விதத்திலும் தடைபடாது.
Comments