ஸ்ரீ அழகிய நாயகி அம்பாள்

ஸ்ரீ அழகிய நாயகி அம்பாள்


 


           தென்காசிக்கு அருகில் கடையநல்லூரில் இருந்து சிறிது தூரம் சென்றால் இலத்தூர்  அடையாளம்..


சுற்றிலும் வயல்வெளி நடுவில் ஸ்ரீ அழகிய நாயகி அம்பாள் சன்னதி உள்ளது..


அழகாய் வலது காலை குத்துக்கால் இட்டு , இடது காலால் மதுவை மிதித்தபடி வடக்கு முகமாய் வீற்றிருக்கிறாள்..


இவள் கேரளாவில் இருந்து வந்தவள் என கூறுகின்றனர்.. 


மிகவும் உக்கிரமாக இருந்தவள் சாந்த சொரூபியாய் அழகாய் ஒளி வீசுகிறாள்..


எப்படி வந்தாள் ? அழகான வரலாறே இருக்கிறது..


ஆமாம்.. முன்னொரு காலத்தில் அண்ணாகுட்டி ஐயர் என்பவர் திருக்குற்றால சித்திரசபை நடராஜரை தரிசிப்பதற்காக தனது வில் வண்டியில் சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு பெண் குழந்தையும், சிறிய பையனும் வில் வண்டியை தொடர்ந்த வண்ணம் பின்னே வந்துள்ளனர்..


யார் இவர்கள் என யோசித்தவாறே இருந்தவர் , சிறு குழந்தைகள் ஏதோ விளையாட்டுதனமாய் வண்டியின் பின் வருகின்றனர் என எண்ணியவண்ணம் வீடு திரும்பியிருக்கிறார் அண்ணாகுட்டி ஐயர்..


அன்றைய தினம் இரவில் அவர் கனவில் தோன்றி உன் வில் வண்டி பின்னால் அண்ணா தங்கையாய் வந்தது " நானும், பைரவரும்" என கூறியிருக்கிறாள்..


தற்பொழுது கோவில் இருக்கும் இடத்தை குறிப்பாய் உணர்த்தி அங்கு இருக்கும் வயலில் இருப்பதாய் சொல்லியிருகலகிறாள் அழகிய நாயகி அம்பாள்..


மறுநாள் இங்கு உழவர்கள் வயலை உழும் பொழுது ஏர்கலப்பையில் ஏதோ இடர்படுவதை அறிந்து பார்த்தபொழுது அழகிய நாயகி வெளிப்படுகிறாள்..


ஏர் உழும் பொழுது வெளிப்பட்டதால் அம்பாளின் மூக்கில் ஏர் பட்ட அடையாளம் இருப்பதை காணலாம்..


அழகிய ,
 அழகிய நாயகிக்கு கோவில் அமைக்கின்றனர்..


இங்கு உள்ள பைரவர் வாகனமின்றி காட்சியளிக்கிறார்..



இக்கோவிலில் பிள்ளயார் தெற்கு முகமாய் இருந்திருக்கிறார்..


அதன்பின் பிரசன்னம் பார்த்து முறைப்படி பி்ள்ளையாரை கிழக்கு முகமாய் எழுந்தருளச்செய்து கோவிலை அமைக்கின்றனர்...


இந்த ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகிய நாயகியின் பெயரை தாங்கிய பெயர்களையே சூட்டுகின்றனர்...


 ஆண்டு தோறும் தை மாதம் வெகு சிறப்பாக கொடை உற்சவம் நடைபெறுகிறது..


அந்த சமயம் வைராவி இனத்தினரால் மது நைவேத்தியம் செய்யப்படுகிறது..
( மது என்றால் தயிர் அண்ணத்தையே கூறுகின்றனர்)


உற்சவத்தின் நிறைவாக பூக்குழி திருத்தேரோட்டமும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது..


சுமார் 2000 வருடத்திற்கு மேலாக கோவில் இங்கு அமைந்திருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன..


--ஜெயந்தி சதீஷ்( (ஸ்ரீவில்லிபுத்துர்)


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி