தந்தை அவரே தந்தை
தந்தையர் தினம்
*
தந்தை அவரே
தந்தை
*
எழுசீர் விருத்தம்
*ஒலி ஒளி உணர
1. தந்தையால்
வந்த
வாழ்வு
இதனைத்
தந்த
தந்தையைப்
பாடு
சிந்தையில்
ஏற்றிப்
போற்று
இதையே
சித்தம்
ஆக்கியே
மாற்று
பந்தமாய்
நின்ற
யாவும்
அவரின்
பண்பி
னால்வந்த
ஊற்று.
வந்தனை
செய்தே
வாழு
நிதமும்
வாழும்
வாழ்க்கையில்
வாழ்த்து.
2.உழைப்பு
என்றதோர்
சொல்லில்
தந்தையின்
உருவம்
தெரியுதே
உணரு
களைப்பு
என்றுமே
காட்டாத்
தந்தையின்
கருத்தை
உணர்ந்து மே
கூறு
சலிப்பு
காட்டிடாப்
பேச்சு
தந்தையின்
சமர்த்தை
விளக்குமே
சாரு(அழகு)
களிப்பு
காட்டிய
காலம்
தந்தையின்
கருணை
நமக்கிந்த
வாழ்வு.
3.நினைத்த
நேரத்தில்
எல்லாம்
எங்கள்
நெஞ்சில்
நின்றிடும்
தந்தை
சினத்த
வேளையில்
கூட
எங்கள்
செல்லம்
ஆகிய
தந்தை
மனத்தில்
நிதமும்
வாழும்
எங்கள்
மங்காப்
புகழின்
தந்தை
தவத்தால்
அடைந்த
பேறாய்
எங்கள்
தந்தை
அவரே
தந்தை
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments