நிரந்தரமாக மூடப்படும் அபாயத்தில் சீன திரையரங்குகள்

நிரந்தரமாக மூடப்படும் அபாயத்தில் சீன திரையரங்குகள்


 


பீஜிங் : 'கொரோனா' வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் ஆயிரக்கணக்கான திரை அரங்குகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் உள்ளதாக சமீபத்திய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.


உலகில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகள் சீனாவில் தான் உள்ளன. அங்கு 69 ஆயிரத்து 787 திரையரங்குகள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் புதிதாக 9708 திரையரங்குகள் திறக்கப்பட்டன.


அமெரிக்காவின் 'ஹாலிவுட்'டுக்குப் பின் மிகப் பெரிய அளவில் லாபம் கொழிக்கும் தொழிலாக சீன திரைத்துறை உள்ளது. ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் கொரோனா தொற்று பரவத் துவங்கிய பின் ஜனவரி 23ல் அந்நகரம் முற்றிலுமாக மூடப்பட்டது. இதையடுத்து அன்றைய தினமே சீனா முழுவதிலும் உள்ள திரையரங்குகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. கடந்த நான்கு மாதங்களாக சீன திரைத்துறையே முற்றிலுமாக முடக்கப்பட்டு இருப்பதால் 32 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 


 





இந்நிலையில் சீன திரையரங்குகளின் எதிர்காலம் குறித்து அறிய சீன திரைப்பட சங்கம் சீன திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை சமீபத்தில் நடத்தின. அதன் முடிவில் 40 சதவீத திரையரங்குகள் இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருவது கடினம் என தெரியவந்துள்ளது.மேலும் ஆயிரக்கணக்கான திரையரங்குகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் உள்ளதாகவும், திரைத்துறை மற்றும் திரையரங்கங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

'கொரோனா நெருக்கடி முடிவுக்கு வந்த பின் 10 சதவீத திரையரங்குகள் மட்டும் பழைய வேகத்தோடு இயங்க வாய்ப்புள்ளது. மற்றபடி கருத்துக்கணிப்பு முடிவுகள் உற்சாகமூட்டுவதாக இல்லை' என ஆய்வில் தெரியவந்துள்ளது. திரையரங்கம் திறப்பதற்கான தடை உத்தரவு அக்டோபர் வரை நீடித்தால் திரைத்துறையின் இந்த ஆண்டுக்கான வருவாயில் 91 சதவீதம் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.


 


இது சீனாவுக்கு மட்டும் பொருந்துவதல்ல.  உலகிலுள்ள எல்லா நாடுகளின் திரை அரங்குகளுக்கும் பொருந்தும்.  தற்போது உலகத்தை ஆட்டிப் படைக்கும்  கொடிய தொற்று நோயின் மரண எண்ணிக்கையையும் யார், யாரையெல்லாம் பாதித்துள்ளது என்பதை அறிந்த யாரும் இனி திரையரங்குகளுக்கே செல்ல முன் வர மாட்டார்கள் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.  தவிர, திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாலும் பணியாளர்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலைக்கு ஆட்பட்டதாலும் சுத்தம்செய்யும்  பணியாளர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்கள் திரையரங்கு பக்கமே வரமுடியாததாலும் பெரும்பாலான திரையரங்குகளில் இருக்கைகள் அனைத்தும் எலிகளால் கடித்து கொதரப்பட்டு, மீண்டும் உபயோகிக்கப்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.  எனவே, பெருத்த செலவு செய்து, சரிபார்த்தாலும், பழுதுபார்த்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்குமா என்ற ஐயத்திலேயே திரையரங்க உரிமையாளர்கள் உள்ளனர்.  ஆகவே, காலம்தான் பதில் சொல்லவேண்டும்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி