The_shawshank_redemption 1994 

#The_shawshank_redemption 1994 


 


        திரை விமர்சனம்


தன்னுடைய மனைவி கள்ளக்காதலுடன் தொடர்பு கொண்டிருந்ததால் கொலை செய்தாக நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு சிறைக்கு செல்லும் ஆண்டியின் சிறை காலங்கள் ரெட் என்னும் நண்பனுடன் கழிய போகிறது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை..20 வருடமாக தண்டனை அனுபவிக்கும் ரெட் க்கு ஒரு புது வாழ்க்கை அமைய போகிறது என்பதை தெரிந்து கொள்ளவும் எந்தொரு வாய்ப்பில்லை.


கொடுமையான  முதல் நாள் இரவு சிறை வாழ்க்கை கண் இமைக்கும் போதே பறி போவது அத்தனை சுலபமான காரியம் இல்லை என்பதை சிறைக்கு செல்லும் அத்தனை பேரும் அறிந்திருக்க கூடும்.இது ஒருநாள் பழகி போகும் அல்லது பழக்கமாகி விடும் என்பதில் ஆண்டிக்கு அதீத நம்பிக்கை இருந்தது என்று சொல்லும் வகையில் ஒவ்வொரு காட்சியும் தத்ரூபம். 


ப்ரூக் 50 வருடமாக சிறை தண்டனை அனுபவிக்கும் ஒரு வயதான மனிதன்.  காகம் அவரது தனிமைக்கு துணையாக அமைந்திருக்கிறது என்றாலும் ப்ரூக் சொல்லும் முறையென்று ஒன்று இங்கு வடிவமைக்கப்பட்டது."இது வளர்ந்து பறக்கிற வரைக்கும் அதற்கு நான் தான் துணையாக இருக்க வேண்டும்" 
என்பது தான்.


சிறையில் இருக்கும் எல்லாருக்கும் தேவையான பொருட்களை வெளியிலிருந்து வாங்கி கொடுக்கும் ரெட்டிடம் ஆண்டி சுத்தியல் வாங்கி தர சொல்லி தன்னுடைய நட்பை தொடர்கிறார்..ரெட் அந்த நிமிடம் பழக்கப்பட்ட ஒரு மனிதனிடம் பேசும்போது உணரும் ஒரு இனக்கமான அன்பை உணர்கிறான்.வித்தியாசத்துடன் கலந்த எண்ணங்களாக ஆண்டி ரெட் க்கு தோற்றமளிக்க தொடங்கினான்.மறுநாள் ஆண்டியின் கையில் சுத்தி கிடைத்தது.


அப்படியாக பயணித்த ஆண்டியின் வாழ்க்கையில் சிறு மாற்றங்கள் ஏற்பட ரெட் காரணமாகி விடுகிறார்.அந்த மாற்றம் தான் ஆண்டியும் ரெட்டும் தங்களை சிறந்த நண்பர்களாக அனைவருக்கும் காட்டும்படி அமைத்துக் கொள்கிறார்கள்.தன்னுடைய திறமையின் மூலமாக சிறை கண்காணிப்பாளர் சிறை கேப்டன் இப்படி எல்லாருடைய வங்கி கணக்கை பார்த்துக் கொள்ளும் வாய்ப்பும் அமைகிறது.இந்த இடத்தில் ஆண்டி யாரென்று சொல்லியே ஆக வேண்டும் . இளம் வயதிலே வங்கியில் vice President ஆக இருந்தவர்.


ஆண்டி ஆசைப்படும் நடிகையின் புகைப்படத்தை ரெட் பரிசளிக்கிறார் .சிறை கண்காணிப்பாளர் ஆண்டியின் தேவை லாபம் என்பதால் அவருக்கு கொடுத்த துணி துவைக்கும் வேலையிலிருந்து நூலகத்தில் வேலைக்கு அனுப்புகிறார்.பின்னர் அங்கிருக்கும் அனைத்து காவலர்களின் வங்கி கணக்கையும் மற்ற சிறையின் காவலர்களின் வங்கி கணக்கையும் சரி பார்க்கிறார் ஆண்டி.


ப்ரூக் தனது விடுதலையை அறிந்த அந்த நிமிடம் வாழ்க்கையை தேட தொடங்கிறார்.50 வருடமாக சிறைக்குள்ளே வாழ்க்கையை கடத்தி ப்ரூக் விடுதலையாகி வெளியே செல்கிறார்.. சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலைக்கு சேர்கிறார்.மாலை நேரம் பார்க் பக்கமாக சென்று புறாக்களுடன் நேரத்தை செலவிடுகிறார்.. இருந்தாலும் அவர் விட்டு வந்த காகத்தின் நினைவு சிறிது கூட அவரை விட்டு அகலவில்லை.எங்கிருந்தாலும் நல்லா இருக்கனும் என்கிற ப்ரூக் ஒரு கட்டத்தில். தனிமையை அதிகமாக உணர்கிறார்.இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைக்கிறார்.சில நேரங்களில் தான் எங்கிருக்கிறோம் என்பதை அறியாமல் அதிர்ச்சியில் இருக்கும் ப்ரூக் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவெடுத்து தூக்கில் தொங்கி விடுகிறார் ..அவர் எழுதிய வைத்த வசனம் மட்டுமே அங்கு மிச்சம்" brook is here" ..


ஆண்டியின் திறமையால் அரசாங்கம் புத்தகங்களை அனுப்பி வைக்கிறது.. கொஞ்ச நாளிலே சிறந்த நூலகம் என்று அந்த சிறை பெயர் வாங்குகிறது.இது அத்தனைக்கும் காரணம் ஆண்டி என்றாலும் அத்தனை பெயரும் சிறை கண்காணிப்பாளரே பெற்றுக் கொள்கிறார்..


இளம்வயது பையன் ஒரு திருடின குற்றத்திற்காக சிறைக்கு வருகிறான்.அவனுடைய சுறுசுறுப்பு அதிகமான வாய் ஒருபக்கம் ஒருமாதிரி இருந்தாலும் ஆண்டி அந்தக் கொலையை செய்யவில்லை என்பதற்கு அவன் சாட்சியாக அமைகிறான்.ஆண்டி மூலம் படித்து பாஸ் ஆகியும் விடுகிறான்.


இந்த செய்தியை ஆண்டி சிறை கண்காணிப்பாளரிடம் சென்று தன் கொலைக்கான சாட்சி இருப்பதாக சொல்கிறார். கண்காணிப்பாளர் அதை நிராகரிக்கிறார்.ஒரு கட்டத்தில் சாட்சியாக இருந்த பையனை சுட்டு கொலைச் செய்கிறார்.


இதை அறிந்த ஆண்டி தான் தப்பித்து செல்ல போகிறேன் என்பதை ரெட்டிடம் மறைமுகமாக சில கருத்துக்களை முன்வைக்கிறார்.அங்கு தான் ரெட்டின் வாழ்க்கை ஒளிக்கு வர போகிறது என்பதை அப்போ அறிந்திருக்கவில்லை."வாழ்க்கையில் இரண்டு வழி மட்டுமே உள்ளது ஒன்று எப்படி வாழ போகிறோம் என்பது மற்றொன்று எப்படி சாக போகிறோம் என்பது".. இதை சொல்லி ரெட் நீங்க வெளிய வந்தால் உங்களுக்காக இந்த இடத்தில் ஒரு பொருள் காத்திருக்கிறது என்பதை சொல்லி அன்று இரவு ஆண்டி தப்பித்து விடுகிறார்.


சிறை கண்காணிப்பாளர் மற்றும் கேப்டன் லஞ்சம் வாங்கியதாக கைது செய்ததாக காவல்துறையினர் வரும் வேளையில் சிறை கண்காணிப்பாளர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொள்கிறார்.ரெட் ம் வெளிய வந்துவிடுகிறார்.


ஆண்டி சொன்ன இடத்தை அடையும் போது அவர்க்கு பணமும் கடிதம் ஒன்றும் கிடைக்குகிறது‌."hope is good thing"(நம்பிக்கை என்பது ரெம்ப முக்கியமான ஒன்று சிறந்த ஒன்று எப்போதும் அழியாது) என்பதையும் ரெட் வர வேண்டிய இடம் பற்றிய நினைவூட்டல் அமைத்திருந்தது..


இனிமேலாவது வாழனும் என்பதில் நம்பிக்கை கொண்ட ரெட் ஆண்டியை வந்தடைந்தார்."நம்பிக்கை தானே வாழ்க்கை" 


- கீர்த்தனா


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி