நாளைய கவலை இன்று வேண்டாம்
நாளைய கவலை இன்று வேண்டாம்
நேற்றைய கவலை, பாரங்களை எல்லாம் தூக்கி வீசிவிட்டு, இன்று என்று சொல்கின்ற இந்த அழகான நாளோடு லயித்து செல்லுங்கள். இன்றைய உணவை ருசித்து மகிழுங்கள். எல்லாவிதத்திலும் இன்றைய வாழ்க்கையை இரசித்து அனுபவியுங்கள்.
நாளைய கவலை இன்று வேண்டாம்
உங்கள் மனம் மிகவும் மென்மையானது. அந்த மனதால் அதிக பாரங்களை சுமக்க முடியாது. எனவே அது இன்றைய பாரங்களை மட்டுமே சுமக்கட்டும்; இன்றைய தினத்தைப் பற்றி மட்டும் சிந்திக்கட்டும். நேற்றைய கவலை, பாரங்களை எல்லாம் தூக்கி வீசிவிட்டு, இன்று என்று சொல்கின்ற இந்த அழகான நாளோடு லயித்து செல்லுங்கள். இன்றைய உணவை ருசித்து மகிழுங்கள். எல்லாவிதத்திலும் இன்றைய வாழ்க்கையை ரசித்து அனுபவியுங்கள்.
மனதுக்கும், உடலுக்கும் ஒருசேர இறுக்கத்தை தரும் மன அழுத்தத்தை போக்க ‘மைன்ட்டிங் மெடிட்டேஷன்’ உதவும். இறுக்கமான மனதை இலகுவாக்குவதும், உடலை நெகிழ வைப்பதும்தான் இதில் முக்கியமானது.
மனதிற்கு அதிக அழுத்தம் ஏற்படும்போது வீட்டின் மாடியிலோ, அறையிலோ சிறிது நேரம் நடந்திடுங்கள். வெளியே தலைகாட்டும் பூக்களை பாருங்கள். மரங்கள் அசைவதில் மனதை செலுத்துங்கள். வீசும் காற்றை அனுபவியுங்கள். உணவினை நன்றாக மென்று சாப்பிடுங்கள். இப்படி இன்றைய சிந்தனையில் நீங்கள் மூழ்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
முழு கவனத்தையும் உங்கள் உச்சி முதல் பாதம் வரை கொண்டு வாருங்கள். பின்பு நன்றாக மூச்சை உள் இழுங்கள். அப்போது உடல் உயர்ந்து, தாழ்வதும் ஆங்காங்கே ஏற்படும் சின்னச்சின்ன வலிகளும் உங்கள் கவனத்தில் வரும். அந்த நேரத்தில் மனதிற்குள் ஏகப்பட்ட சிந்தனைகள் உருவாகும். வரிசைகட்டி நிற்கும் அந்த சிந்தனைகளை எல்லாம் கவனத்தில் கொள்ளாதீர்கள். அவை ஒவ்வொன்றையும் வரவேற்று, அதுபற்றி சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஓடையில் சுதந்திரமாக நீந்தும் மீன்களை போல, அந்த சிந்தனைகள் அப்படியே உங்களை கடந்து செல்ல அனுமதியுங்கள். கடந்துபோன கவலைகளையும், நாளை வர இருக்கும் பிரச்சினைகளையும் பற்றி சிந்திக்காமல், இன்றைய நாளில் மட்டும் மூழ்கி ரசித்து, ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக கழியுங்கள்.
Comments