மனிதன் உடலுக்குள் சென்ற அட்டைபூச்சி அரை லிட்டர் ரத்ததை குடித்தது
நீச்சல் அடிக்கும்போது மனிதன் உடலுக்குள் சென்ற அட்டைபூச்சி அரை லிட்டர் ரத்ததை குடித்தது
நீச்சல் அடிக்கும் போது மனிதன் உடலுக்குள் சென்ற அட்டைபூச்சி அரை லிட்டர் ரத்ததை குடித்தது டாக்டர்களின் தீவிரமுயற்சியால் வெளியே கொண்டுவரப்பட்டது.
30-05-2020
புனோம்
கம்போடியாவின் புனோம் பென்னில் வசிக்கும் முதியவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகே இருந்த குளத்தில் ஆடையின்றி குளித்துள்ளார். அப்போது அவர் உறுப்பு காயமடைந்து ரத்தம் வந்துள்ளது. ஏதேனும் பூச்சி கடித்திருக்கும் என்று நினைத்த முதியவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்
மருத்துவர்கள் அந்த நபரை பரிசோதனை செய்துள்ளனர். தொடர்ந்து அவரது உறுப்பில் வலி இருந்துள்ளது. இதையடுத்து சிறிய கேமிரா வழியாக சிறுநீர்ப்பையை சோதனை செய்துள்ளனர். அப்போது அட்டை பூச்சி ஒன்று அவரது உடலுக்குள் புகுந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் அந்த அட்டை பூச்சி அவரது ரத்தத்தை உறிஞ்சி பெரிதாகி வருவதும் தெரிய வந்தது. உடலின் மற்ற பாகங்களையும் அந்த அட்டை பூச்சி சேதப்படுத்த ஆரம்பித்துள்ளது. அந்த அட்டை பூச்சி 500 மில்லிக்கு அதிகமான ரத்தத்தை உறிஞ்சியதால் அதனை வெளியேற்ற மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். ஒரு நாள் முழுவதும் முதியவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த பின் அவர் குணமடைந்து உள்ளார்.
இதுபோன்ற சம்பவம் முதல் முறை அல்ல. 2018 ஆம் ஆண்டில், சீனாவின் நெய்ஹைர் நகரில் ஒரு மனிதனின் மூக்கிலிருந்து அட்டைப்பூச்சி வெளியேற்றப்பட்ட சம்பவமும் நடந்து உள்ளது
Comments