தொற்றை எதிர்த்து போராட

வைரஸ் தொற்று நுரையீரலில் பரவும் போதுதான்அதிகமாக உயிரிழப்பு நிகழும் என்றாலும்நுரையீரலை பலப்படுத்தி கொள்வதன்மூலம்தொற்றை எதிர்த்து போராட முடியும். சில உணவுகளை சாப்பிடுவதுநுரையீரலின் ஆரோக்கியத்திற்கு உதவும்.


டாக்டர் ஆர்.மைதிலி,
ஆயுர்வேத மருத்துவர்சென்னை


பூண்டு



பூண்டை நம் அன்றாட உணவில் அளவோடு சேர்த்து வந்தால், நுரையீரல் புற்றுநோய் வருவதைக் கூட தடுக்க முடியும். பூண்டில் இருக்கும், 'அலிசின்' என்னும் இயற்கையான ஆன்டிபயாடிக் சத்து, நுரையீரலில் தொற்று வியாதியை உண்டாக்கும் வைரஸ் பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை கொண்டது. ஆகவே, நம் உணவில் தினமும் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டு சேர்த்துக் கொள்வது, நுரையீரலுக்கு ஆரோக்கியத்தை தரும்.

இஞ்சி
இஞ்சியில் உள்ள, 'ஜிஞ்சரால்' என்னும் பொருள் தான், இதன் வித்தியாசமான சுவைக்கு காரணம். இந்த ஜிஞ்சரால், சளி மற்றும் இருமலை கட்டுப்படுத்தும் குணமுடையது; நுரையீரலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். இஞ்சியை நசுக்கிய பின், அதை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, ஒரு டம்ளராக குறைந்து வரும் போது, இந்த நீரை வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வருவது நல்லது.


துளசி
துளசி அனைத்து சுவாசப் பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வு தரும் மூலிகை. தினமும், 10 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், சுவாச பிரச்னைகள் சீராகும். தற்போது கோவிட் பிரச்னை வராமல் இருக்கவும், நுரையீரலை பலப்படுத்தவும் துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.

ஆடாதோடை
ஆடாதோடை மூலிகை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். சளி அல்லது இருமல் ஏற்பட்டால் 1/4 டீஸ்பூன் ஆடாதோடை பொடியை தேவையான அளவு தேனில் குழைத்து கலந்து சாப்பிட்டு வந்தால், சளி குணமாவதோடு நுரையீரலும் பலமாக இருக்கும்.

பால் + மஞ்சள் + மிளகு + இலவங்கப்பட்டை + ஏலக்காய்


பாலை நன்றாக காய்ச்சிய பின், 1 டம்ளர் பாலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள், 1/4 டீஸ்பூன் மிளகு, 1/4 டீஸ்பூன் இலவங்கப்பட்டை துாள் மற்றும் சிட்டிகை ஏலக்காய் துாள் சேர்த்து குடித்து வந்தால்நுரையீர லுக்கு வலு கிடைக்கும்.

மஞ்சள்
மஞ்சளில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் தன்மை நிறைந்துள்ளது. இதில் இருக்கும், 'குர்குமின்' என்னும் வேதிப்பொருள், நம் உடம்பில் நோய் எதிர்ப்பு தன்மையை வேகமாக அதிகரிக்க செய்யும். அடுத்தது இலவங்கப்பட்டை. இதில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டிவைரல், ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிபங்கல் தன்மை நிறைந்துள்ளது. சளி, தொண்டை கரகரப்பு ஆகியவற்றை குணமாக்கும்.

மிளகு துாள்


மிளகில் வைட்டமின் சிப்ளேவனாய்டுஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டிபாக்டீரியல் தன்மை நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்கு இதை சாப்பிடலாம்.

ஏலக்காய்
ஏலக்காய், பச்சை மற்றும் கறுப்பு நிறத்தில் கிடைக்கும். இவை இரண்டுமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. குறிப்பாக கறுப்பு நிற ஏலக்காய் சளி, இருமல் மற்றும் நுரையீரல் கோளாறுகளை சரி செய்யக்கூடியவை. கொரோனா வைரஸ் குறித்த அச்சம் நிகழ்வதால், தற்போது நம்மை நாமே காத்துக்கொள்ள, தினமும் ஒரு கப் இந்த பாலை குடிப்பது  நல்லது. 


கற்பூரவள்ளி
கற்பூரவள்ளி இலையில் நுரையீரலை சுத்தம் செய்யும் பண்புகள் ஏராளமாக உள்ளன. இது, நுரையீரலில் உள்ள அழற்சியைக் குறைப்பதோடு, சளித் தேக்கத்தையும் தடுக்கும். அதற்கு, சுடுநீரில் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து, தேன் கலந்து குடிக்க வேண்டும்.

புதினா
தினமும், 3, 5 புதினா இலைகளை சாப்பிட்டால், நுரையீரல் வலிமைஆகும். அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும். அதிமதுரச் சூரணத்தை (பொடி) 2 கிராம் அளவு தேனில் குழைத்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி இருந்தால் குணமாகும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி