சென்னை போலீசாருக்கு சுழற்சி முறையில் 7 நாட்கள் ஓய்வு
சென்னை போலீசாருக்கு சுழற்சி முறையில் 7 நாட்கள் ஓய்வு - கமிஷனர் உத்தரவு
01-06-2020 17.57
சென்னை போலீசாருக்கு சுழற்சி முறையில் 7 முதல் 10 நாட்கள் வரையில் ஓய்வு அளிக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் போலீசாருக்கு கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. போலீசார் மத்தியிலும் வைரஸ் பரவல் அதிகமாகி உள்ளது. 300-க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை போலீசாருக்கு சுழற்சி முறையில் 7 முதல் 10 நாட்கள் வரையில் ஓய்வு அளிக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் இந்த ஓய்வை எடுத்துக்கொள்ளலாம். ஒரு காவல் நிலையத்தில் பணியில் இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கையில் 10 சதவீதம் பேருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு 100 பேர் பணியில் இருக்கும் இடத்தில் 10 பேருக்கு ஓய்வு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கமிஷனரின் இந்த அறிவிப்பு போலீசார் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
சுழற்சி முறையில் அனைத்து போலீசாரும் பயன் பெறும் வகையில் ஓய்வை பிரித்து வழங்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து ஏற்கனவே 55 வயதுக்கு மேற்பட்ட போலீசார் பணிக்கு வரவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் சுழற்சி முறை
Comments