60 களுக்கு பிறகு பிறந்த எவரும் தவிர்க்கவே முடியாதவர்

Secret of Ilayaraja's Success for the last 50 Years...... Unknown TRUE INFORMATION



........ 60 களுக்கு பிறகு பிறந்த எவரும் தவிர்க்கவே முடியாதவர்


    இளையராஜா என்பவரை 60 களுக்கு பிறகு பிறந்த எவரும் தவிர்க்கவே முடியாதா ஒரு அங்கம் தான் என்றால் அது மிகையாககாது 


 இந்த தடவை தான் முதன் முதலாய் இளையராஜாவின் பெயரை டேனியல் ராஜா - ராசையா என பல இயற்பெயரை கொண்டு போஸ்ட்களாய் பார்க்க முடிகிறது - அது வெட்கக்கேடான செயல். இதில் அவர் யார் என்பதை விட்டு அவர் மதம் என்னவென்று  என்று ஆராய்வது தான் சாப்பிட்ட சாம்பாரில் உள்ள கடுகை தான் வெளியேற்றிய மலத்தில் தேடுவதற்கு சமம்.



இளையராஜா - நான் - என பல வருஷம் பெருமை பீத்தியது போதும் போதும் என ஆகிவிட்டபடியால் இன்று இளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார் என்பதே இன்றைய பதிவு.


வழக்கம் போல பாவலர் தான் இசை, கம்யூனிஸ்ட் கூட்டங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது பாவலர் ஆன் குரலில் பாட பின்பு அவருடன் பெண் குரலில் பாட ஒருவர் தேவைப்பட்ட ஒரு தருணத்தில் தான் இளையராஜா அந்த பெண் குரல்பாடகியாய்  உருவானது மட்டுமல்ல பாரதிராஜா மூலம் சென்னைக்கு வந்து நடிகர் சங்கிலி முருகன் இடத்தில்  தங்கி அந்த சங்கீதா கல்யாண மண்டபத்தில் வாசித்து காட்டாத நாடக கோஷுடியே இல்லை என சொல்லலாம்.


             எவர் மூலம் சினிமா கனவுகளுடன் சென்னை வந்தாரோ அதே பாரதிராஜா முதல் படத்திற்கு பாரதிராஜா குமார் தான் இசைமைப்பாளர் என கூறிய போதும் தளரவில்லை. அன்னக்கிளி படத்துக்கு முன் இரு படத்தின் இசை கோர்த்து படம் பாதியில் நின்று போனது ஆனாலும் அன்னக்கிளி வெற்றி 1976 ஆம் ஆண்டு பட்டி தொட்டி எங்கும் அனல் பறக்க அப்பாவும் பாரதிராஜா இவரை தான் முதல் படமான 16 வயதினிலே படத்துக்கு இசைக்கு ஆதரவு தரவில்லை - கடைசியில் அதன் தயாரிப்பாளர் குமார் வேண்டாம் நம்ம ராஜாவையே போடலாம்  என கூறிய பிறகு தான் பாரதிராஜா சம்மதித்தார்.


 அப்போது இளையராஜா இசை ஒரு புது கிரகத்தை ஆல் ஆடியன்ஸுக்கு கொடுக்கவே அதில் மயங்கி போய் தான் இசை சாம்ராஜ்யத்தை விரிவு செய்யவில்லை. உடனே அவர் செய்த காரியம் 1977 ல் வரும் காசை அப்படியே குரு தட்சணையாக கொடுத்து அவர் செய்த முக்கிய காரியம் - இசை தியரியை கற்றுக்கொண்டார். அதாவது நோட்ஸ் எப்படி எழுதுவது என கற்று கொண்டது தான் ஆக பெரிய விஷயம்.


           சரி நமக்கு மெல்லிசை நல்ல வருதுன்னு அப்படியே இருந்திருந்தால் அவர் ஒரு பத்து வருடத்திலேயே காணாமல் போயிருப்பார் என்பதில் மாற்று கருத்தில்லை. அது மட்டும் அல்ல அதன் பிறகு - கர்நாடக முறை இசை - ஆங்கில இசை கோர்வை என மேஸ்ட்ரோ அளவுக்கு என்றுமே ஒரு மாணவனாய் இருந்தா ஒரு காரணம் தான்


            இளையராஜா அரை நூற்றாண்டு ராஜாவான என்பது உண்மை கதை. அவர் மட்டும் முறையான இசை கோர்வைக்கு தேவைப்படும் நோட்ஸ்களை எழுதாமல் இருந்திருந்தால் 1978 முதன் முதல் 6 டிராக் மூலம் ஸ்டெரியோ என்னும்( Movie - Priya )இசையை சிங்கப்பூரில் பதிவு செய்து நமக்கு Sterio என்னும் இசை கிடைக்காமல் போயிருக்கும். அவர் எம்மதமாயினும் அவரை போல ஒரு உண்மை ஹிந்துவை கண்டதில்லை அவரை போல ஒரு சாதனையாளரை நாம் காணவே முடியாது. அதனால் நீங்கள் எந்த உயரத்தில் இருந்தாலும் கற்று கொள்வதை நிறுத்தவே கூடாது என்பது என்னுடைய கூற்று.


 Wishing him a long life and God Bless Music and Ilayaraja


 



ரவி நாக் ( நியுயார்க்)


இளையராஜாஅவர்களின் பிறந்தநாளான இன்று அவரைப்பற்றி நமக்கு தெரியாத விஷயங்களை பகிர்ந்து கொண்ட திரு ரவி நாக் அவர்களுக்கு நன்றி....


...பீப்பிள் டுடே


//



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி