25 அடி உயரத்தில் அமெரிக்காவில் மிகவும் உயரமான அனுமன் சிலை
30000 கிலோ எடையில் 25 அடி உயரத்தில் அமெரிக்காவில் மிகவும் உயரமான அனுமன் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹாக்கிசன் மாகாணத்தில் உள்ள டெலவேர் பகுதியில் 1996ம் ஆண்டு கட்டப்பட்ட கோயில் ஒன்றில் உள்ள அனுமன் சிலையை புதுப்பிக்க அந்த கோயில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதனை அடுத்து, தெலங்கானாவின் வாராங்கல் பகுதியில் உள்ள சிற்பக்கலைஞர்களிடம் தகவல் தெரிவித்து மிகவும் பிரம்மாண்ட அனுமன் சிலையை தயாரிக்க வலியுறுத்தியுள்ளனர். இந்த அனுமன் சிலையை தயாரிக்க சுமார் 1 வருட காலம் எடுத்துக்கொண்ட சிற்பக் கலைஞர்கள், கறுப்பு நிற கிரானைட் கல்லால் இதனை தயாரித்துள்ளனர். தயாரிப்பது மற்றும் தெலங்கானாவில் இருந்து அமெரிக்காவிற்கு எடுத்துவருவது என மொத்தம் 1 லட்சம் அமெரிக்க டாலர் இந்த பிரம்மாண்ட அனுமன் சிலைக்காக செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்து சிலைகளிலேயே தற்போது நிறுவப்பட்டுள்ள 25 அடி உயர சிலையே அதிக உயரம் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
25 உயர பிரம்மாண்ட அனுமன் சிலையை அந்த கோயிலில் நிறுவும்போது சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டது. கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக குறைவான அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக அந்த கோயில் நிர்வாகத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் அமெரிக்காவில் மத சார்பான சிலைகளிலேயே 2வது உயரமான சிலை எனவும் பெருமை பெற்றுள்ளது இந்த அனுமன் சிலை. முதல் இடத்தில் நியூ கேசில்-ல் உள்ள Our Lady Queen of Peace சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது
Comments