பத்திரிகைகள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து
பத்திரிகைகள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து- சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: 21-05-2020
தமிழகத்தில் பல்வேறு காலகட்டங்களில் அரசுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் பத்திரிகைகள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
அவ்வகையில் பல்வேறு பத்திரிகை நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட 28 வழக்குகள் இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்திரிகைகள் மீது அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தகவல்
செஏ துரைபாண்டியன்
Comments