கீதாஞ்சலியின் நாயகன்


இரவீந்திரநாத் தாகூர்




19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம்இசை வடிவம்  மற்றும் இந்தியக் கலைகளிலும் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்.


 கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே. ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.


இசைப் பாடகர், கதாசிரியர், நாவலாசிரியர், ஓவியர், கல்வியாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர். கவிதைக்காக அவர் பெற்ற நோபல் பரிசு அவரது பன்முகங்கள் கவனிக்கப்படாததற்கு காரணம் என்றும் அறிஞர்கள் சொல்வதுண்டு. இந்தியாவின் தேசிய கீதத்துக்காக இன்றளவும் எல்லாத் தரப்பினராலும் அறியப்படும் வங்காளத்துக் கவி இரவீந்திரநாத் தாகூரின் பிறந்த தினம் இன்று.


தாகூரின் படைப்புகள் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும்கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது.


இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. . இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


 கல்கத்தாவைச் சேர்ந்த வங்காளப் பிராமணரான இவர் ஜெஸ்சூர் மாவட்டம்  ஜமீந்தார்  மரபைச்  சேர்ந்தவர் ஆவார்.


தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார்.


 பதினாறாவது வயதில் இவரது முதலாவது கவிதைத் தொகுதியை  பானுசிங்கோ  (சூரிய சிங்கம்) என்னும் புனைபெயரில் வெளியிட்டார்.


1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும்நாடகமும் இவரது பெயரிலேயே வெளிவந்தன.


 


தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவர் தனது போர்க்குணத்தைபோராட்டத்தை ஓவியங்களின் மூலமாகவும்கேலிச் சித்திரங்களின் மூலமாகவும்எழுத்துகள் மற்றும் இரண்டாயிரம் பாடல்களின் மூலமாகவும் வெளிப்படுத்தினார். மேலும் இவர் விசுவபாரதி எனும் பல்கலைக்கழகத்தையும் நிறுவினார்.







Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி