<no title>

ரசம் இட்லி


 


 


தேவையான பொருட்கள் :

இட்லி – 5


ரசம் வைக்க :

தனியா - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 6
துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - சிறிதளவு
தக்காளி - 1/2 கப்
புளி தண்ணீர் - 1/4 கப்
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
பெருங்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தே. அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு



செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்.

பூண்டை தட்டி வைத்து கொள்.

தனியா, காய்ந்த மிளகாய், மிளகு , துவரம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் ஆகியவற்றை கடாயில் வறுத்து ஆற வையுங்கள். பின் மிக்ஸியில் நைசாக பொடித்து கொள்.

தக்காளியை கைகளால் நன்றாக மசித்து புளித் தண்ணீர் சேர்த்து பொடியாக்கி வைத்துள்ள ரசப் பொடி, உப்பு சேர்த்து கலக்கு.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்  கடுகு போட்டு வெடித்த பின் காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு பெருங்காயப் பொடி சேர்த்து, தட்டிய பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளித்து அதை கலக்கி வைத்துள்ள ரசத்தில் ஊற்று.

அடுப்பில் ரசக் கலவையை வைத்து சிறு தீயில் வை. கொதிநிலை வந்ததும் இறக்கிவிடு. ரசம் தயார்.

பரிமாறும்போது இட்லி வைத்து அதன் மேல் ரசம் ஊற்றி மேலே சிறிது கொத்தமல்லி, காராபூந்தி தூவி கொடு.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி