திருத்துறைப்பூண்டியில் தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வேலை நேரத்தை அதிகரிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில் தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வேலை நேரத்தை அதிகரிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஏஐடியுசி, சிஐடியு எல்பிஎப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு திட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் தொழிலாளர் சட்டதிருத்தத்தை கைவிட வேண்டும், வேலை நேரத்தை அதிகரிக்க கூடாது, தொழிலாளர் சட்டதிருத்திற்கு குடியரசுதலைவர் ஒப்புதல் தரக்கூடாது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது, ஈட்டிய விடுப்பை வழங்க வேண்டும், அரசு மருத்துவமனைகள், உள்ளாட்சி துப்புரவு பணிகளில் ஈடுபடும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.
மேலும் ஆர்ப்பாட்டத்தின்போது தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படும் மத்திய மாநில அரசை கண்டித்து முழக்கமிட்டனர் ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர்.
ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், சிபிஐ நகர செயலாளர் முருகேசன், சிஐடியூ மாவட்ட பொருளாளர் பாண்டியன் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.‘
செய்தியாளர். பாலா. படங்கள். மு அமிர்தலிங்கம்
Comments