மும்பையில் சடலங்களுக்கு நடுவே கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் அவலம்!
மும்பையில் சடலங்களுக்கு நடுவே கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் அவலம்!
மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்தியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது மகாரஷ்டிரா மாநிலம். இங்கு இதுவரை நோய் தொற்றால் 16,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 651 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தலைநகர் மும்பையில் பாதிப்பு அதிகபட்சமாக 10,000-ஐ கடந்து திணற வைத்துள்ளது.
மும்பை மாநகராட்சி மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்தியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவருக்கு அருகிலேயே, கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் பக்குவப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 உயிரிழந்த சடலங்களும், முறையாக விதிமுறைகள் பின்பற்றாமல் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுவது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன.
தகவல்
Comments