உழைப்பாளர்             தினம்                  எழுசீர்      கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

உழைப்பாளர்


            தினம்


          **


         எழுசீர்


     கழிநெடிலடி


ஆசிரியவிருத்தம்


         **



  1. உழைப்போர்


    உயர 


     உலகம்


      உயரும்


       மனத்தில்


         நினைத்தால்


           மகிழ்வாகும்


 


 அழைப்போர்


   குரலில்


     அழுத்தம்


       அமைந்தால்


         விடியல்


           விளைக்கும்


           விடிவாகும்


 


 இழைப்போர்


  வடித்தால்


    இடரும்


     உருவும்


       அழகுச்


         சிலையின்


          அணிசேரும்


 


 கழைப்பாய்


 (குத்துக்கோல்)


  எடுத்தே


    கருத்துக்


      குருடர்


        துடிப்பை


        விரட்டத்


         துணிவோமே.


 



  1. இணைந்த


      கரத்தால்


        இருளை


         விலக்கத்


          துணிந்தே


           வருவீர்


            துணையாக


 


 இணைந்த


   செயல்கள்


     இனிதாய்


       முடியும்


        அறிந்தே


         முயல்வீர்


           அணியாக


 


 இணைந்த


   நமக்கே


     இடர்கள்


       மறையும்


        இனியும்


          தவறீர்


           இணையாக


 


 இணைந்தே


   உயர்வோம்


    எதிலும்


     அயரோம்


       இருகை


         உயர்த்தி


          எழுவோமே.


         **


உழைப்போர்


   தினத்தில்


    உழைப்பால்


      உயர


       வழுக்கள்


        தவிர்த்தே


       வாழ்த்துவோம்


 


வணக்கத்துடன்🙏


ச.பொன்மணி


ஒலி ஒளி உணர



 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி