பத்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி எரிக்கப்பட்டு கொலை

நெஞ்சு பொறுக்குதில்லையே


பத்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி எரிக்கப்பட்டு கொலை


 
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சிறுமதுரை காலனியை சேர்ந்தவர் ஜெயபால், பெட்டி கடை வைத்துள்ளார். இவரது மகள் ஜெயஸ்ரீ (14). பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று (மே10) காலை 11:30 மணியளவில் தூங்கி கொண்டிருந்தபோது இவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியதாக தெரிகிறது. பலத்த தீக்காயமடைந்த மாணவி சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமி, மாஜிஸ்திரேட்டிடம், அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் முருகன், கலியபெருமாள் உள்ளிட்ட சிலர் தன்மீது தீ வைத்து எரித்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். சம்பவம் தொடர்பாக எஸ்.பி., ஜெயக்குமார், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகன் மற்றும் கலியபெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





பெற்றோர்களிடம் இருந்த முன்விரோதம் காரணமாக அதிமுக முன்னாள் கவுன்சிலர்களால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, இன்று  (மே11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


 


இத்தகைய காட்டுமிரண்டிகளுக்குக் கடுமையான தண்டனை சட்டத்தின் மூலம் வழங்க உரியவர்கள் ஆவன செய்ய வேண்டுகிறோம்.


 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி