மனித வளர்ச்சிக் குறைபாடு இருக்கும்
கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனால், கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை உள்ளடக்கிய மனித வளர்ச்சிக் குறியீடு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஐ.நா. வளர்ச்சித் திட்டக் குழு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 1990ம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக இந்த ஆண்டு, மனித வளர்ச்சிக் குறியீடு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் ஏழை மற்றும் பணக்கார நாடுகளை உள்ளடக்கிய அனைத்து பிராந் தியங்களிலும் மனித வளர்ச்சிக் குறைபாடு இருக்கும் என தெரிவித்துள்ள ஐ.நா. வளர்ச்சித் திட்ட அறிக்கை, அதே நேரத்தில் வளர்ந்த நாடுகளில் இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் என கணித்துள்ளது.
மனிதர்களின் கல்வி, உடல் ஆரோக்கியம், மற்றும் வாழ்க்கை தரம் ஆகியவற்றை மையப்படுத்தி உலகளவில் மனித வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளிலேயே மனித வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் வளரும் நாடுகளில் வசிக்கும் மக்களின் கல்வி, பொருளாதாரம், ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை தரம் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Comments