தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுமா
தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது எப்போது?- அமைச்சர் பதில்
மே 15, 2020 11:01
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
சென்னை:
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று கூறியுள்ளதாவது:-
தமிழகத்தை விட்டு கொரோனா பாதிப்பு நீங்கிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ளவர்கள் முழுமையாக கல்லூரிகளில் இருந்து வெளியேறிய பின்பு தூய்மைப்பணி முடித்த பிறகே வகுப்புகள் தொடங்கும். மாணவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை என்ற நிலை உருவாகிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும்.
கொரோனா தாக்கம் குறைந்த பின்பே செமஸ்டர் தேர்வும், கலந்தாய்வும் நடத்தப்படும். பிஇ கலந்தாய்வுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யவும் அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments