பூலோகக் கற்பக விருட்சம்
`பூலோகக் கற்பக விருட்சம் |
- கோடைகாலம் துவங்கியதுமே, அளவுக்கு அதிகமாக வெயில் கொளுத்தி வருவதால் கோடை வெப்பத்தால் உடல் சூடாகி பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
- கோடைகால சூட்டை தணிக்க மக்கள் பல்வேறு குளிர்பானங்களை அதிகளவு உட்கொள்கின்றனர்.
- இது போன்ற குளிர்பானங்கள் உடல் வெப்பத்தை சமப்படுத்துவதற்குப் பதிலாக நோய்வாய்ப்படுத்துகிறது.
- மேலும் ஏசி அறையில் இருந்தாலும் உடல் உஷ்ணமடையும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- இதனால் கோடை வெயிலில் இருந்து தப்பிக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் இளநீர் சரியான தேர்வு என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
- இதுகுறித்து அரசு மருத்துவமனை சித்த மருத்துவர்கள் கூறுகையில், இளநீர் உடல்சூட்டை தணிப்பதற்கு ஏற்ற பானமாகும்.
- இதில் புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரி, கால்சியம், இரும்புசத்து, தயமின், ரிபோபிளேவின், நியாசின் போன்றவை உள்ளன. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இளநீர் சரியான தேர்வாகும். இளநீரில் உள்ள பொட்டாசியம், எலக்ட்ரோலைட் குறைபாட்டைப் போக்கி வயிற்றுபோக்கை சரிசெய்ய உதவுகிறது.
- இதில் உள்ள எதிர்ப்பு சக்தி வைரஸ் நோய் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக அமைகிறது. (அண்மைக்கால கொடியகொரோனா தொற்று இதில் செர்க்கப்படவில்லை. அந்த முயற்சியில் மருத்துவர்கள் டுபட்டதாகத் தெரியவில்லை).
- உடல் சூட்டைக் குறைப்பதுடன், குளிர்ச்சியைத் தருகிறது. வாதத்தை கட்டுப்படுத்துவதுடன், சிறுநீரக கற்கள் உருவாவதைக் கட்டுப்படுத்துகிறது.
- இரத்தத்தில் கொழுப்பு அளவைக் குறைக்கிறது. சருமத்தைப் பொலிவாக்க உதவுகிறது.
- இரத்தசோகை, உற்சாகமின்மைக்கு நிவாரணம் அளிக்கிறது.
- செரிமான சக்தியை மேம்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இருமல் நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
- செரிமான கோளாறுகளால் அவதியுறும் சிறு குழந்தைகளுக்கு இளநீர் ஓர் கைகண்ட மருந்து.
- உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரிசெய்வதற்கு இளநீரைப் பருகுவது நல்லது.
- வளர்ச்சியை ஊக்குவிக்கும் கரிமப்பொருட்கள் இளநீரில் உள்ளன.
- குடல்புழுக்களை அழிக்கின்றது.
- காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானம்.
- சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.
- ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்கின்றது.
- சிறந்த சிறுநீர் பெருக்கி.
- சிறுநீரக கற்களைக் கரைக்க உதவுகின்றது.
- சிறுநீரக கிருமி நீக்கியாக செயல்படுகின்றது.
- இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதற்கு உதவுகின்றது.
வெப்பம் அதிகமாக உள்ள இடங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் பெரிதளவில் வளரும் தென்னை மரங்கள், இந்தியாவில் அதிக அளவில் கேரளாவில் காணப்படுகிறது. உஷ்ணம் அதிகமுள்ள பகுதியில் வாழும் மக்களுக்கு இயற்கையே தந்த அருமருந்து இளநீர் என ஆயுர்வேதம் எடுத்துரைக்கிறது. .
நோய் தடுக்கும் இளநீர்!
இளநீரிலேயே, இளசாக உள்ள காய்களின் நீர் அதிக இனிப்பு சுவையுடனும், முற்றின காய்கள் இனிப்பு குறைவாக இருப்பதையும் காணலாம். இதற்கு அதில் உள்ள 'சுக்ரோஸி'ன் அளவே காரணம். இளசாக உள்ளபோது இதில் 'சுக்ரோஸ்' அதிக அளவு இருக்கும்.
இதைத் தவிர இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என தாதுப்பொருட்கள் கணக்கிலடங்காது அடங்கியுள்ளது. தவிர இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன.
தாதுப் பொருட்கள், குறிப்பாகப் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் இளநீரைப் பருகக் கூடாது. அதேபோல் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் அல்லது தினமும் இளநீர் பருகக்கூடாது. முற்றின தேய்காயில் உள்ள இளநீரே இவர்கள் பருக உகந்தது.
இளநீரைப் பருகுவதோடு, அதில் உள்ள இளசான தேய்காய்ப் பகுதிகளையும் சாப்பிடுவது நல்லது. அதோடு சதைப் பகுதி புரதச்சத்தும் நிறைந்ததாகும்.
இளநீர், வெப்பம் அதிகமாகும்போது சருமத்தில் ஏற்படும் வியர்குரு போன்றவற்றின் மீது தடவவும் நல்ல மருந்தாகும். முகத்தின் சரும பாதுகாப்பிற்கும் இளநீர் தடவிக் கொள்வது நல்லது.
இளநீரானது உடனடியாக உட்கிரகிக்கப்படும் தன்மையைக் கொண்டுள்ளது. எனவே இது எளிதில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தினை வழங்கிவிடும்.
மேலும் இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம் போன்றவை மின்பகுளிகளாகச் செயல்பட்டு உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவினை சரியான அளவில் சமநிலைப்படுத்துகின்றன.
வெயில் சென்றுவிட்டு நாம் இளநீரினை அருந்தும்போது நம்மைவிட்டு நீங்கிய தாதுஉப்புக்கள், விட்டமின்கள் ஆகியவற்றை நாம் திரும்பப் பெற்று புத்துணர்ச்சியை உணர்கிறோம்.
எனவே நீர்இழப்பினால் அவதிப்படுபவர்கள் இளநீரினை உண்டு நல்ல தீர்வினைப் பெறலாம்.
உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின்போது கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளிலிருந்து முழுமையான ஆற்றலைப் பெற மாங்கனீசு என்ற தாதுஉப்பு தேவை.
இளநீரில் மாங்கனீசு காணப்படுவதால் இதனை அருந்தும்போது நாம் முழுமையான ஆற்றலைப் பெற்று வளர்ச்சிதை மாற்றம் நன்கு நடைபெறுகிறது.
பொதுவாக நாம் உண்ணும் உணவில் அதிக சோடியமும், குறைந்த பொட்டாசியமும் இருக்கிறது. சோடியமானது சிறுநீரகத்தில் நீரினை தேக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
இதனால் சிறுநீரினை வெளியேற்றுதலில் சிறுநீரகத்தின் செயல்பாடானது அதிகரிக்கிறது. பொட்டாசியம் சிறுநீரினை எளிதில் வெளியேற்ற உதவுகிறது.
மேலும் பொட்டாசியம் உடலில் உள்ள நச்சினை சிறுநீர் மூலம் வெளியேற்றி சிறுநீரகக்கற்கள் உருவாவதைத் தடை செய்து சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கிறது.
இளநீரில் குறைந்தளவு சோடியமும், அதிகளவு பொட்டாசியமும் காணப்படுகிறது. எனவே இதனை குடிக்கும்போது சிறுநீரகம் சீராக செயல்பட்டு சிறுநீரகக்கற்கள் உருவாது தடைசெய்யப்படுகிறது.
இளநீரில் உள்ள பொட்டாசியமானது உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீராக வெளியேற்றி இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது.
மேலும் இதில் உள்ள அர்ஜினைன் என்ற அமினோ அமிலமானது இரத்த நாளங்களை சீராக்கி சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
இதனால் இரத்த அழுத்தம் சீராகிறது. எனவே இளநீரினை உண்டு இரத்த அழுத்தத்தைச் சீராக்கலாம்.
இளநீரில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு, காலரா போன்ற செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகளின்போது இளநீரினை அருந்தலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இதில் உள்ள தாதுஉப்புக்கள் செரிமான வியாதிகளால் உண்டாகும் நீர் இழப்பினை சரிசெய்கின்றன. மேலும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டினை இதில் உள்ள பெப்டிடைட்ஸ் தடை செய்கிறது.
மக்னீசியமானது தளர்வு தாதுஉப்பு என்று அழைக்கப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தை அழுத்தத்திலிருந்து தளர்வு செய்கிறது. மேலும் இது செரோடோனின் என்ற நல்ல ஹார்மோன் சுரப்பினைத் தூண்டுகிறது.
கால்சியமானது சீரான தசை தளர்வினை உருவாக்குகிறது. போதுமான அளவு கால்சியம் உள்ள உணவினை உண்ணும்போது இதய தசைகள் உள்ளிட்ட உடலில் உள்ள எல்லா தசைகளும் பிடிப்புகள் இல்லாமல் தளர்வாக இருக்கின்றன.
எனவே கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ள இளநீரினை அருந்தும்போது அவை தசையினை பிடிப்புகள் ஏதுமின்றி தளர்வாக வைப்பதுடன் மனதிற்கும் அமைதியை வழங்குகின்றன.
இளநீரில் கல்லீரலினைப் பாதுகாக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இளநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் கல்லீரலில் உள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்றி கல்லீரலைப் பாதுகாக்கின்றன.
இளநீரில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது. இவை எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவ
இளநீரில் சைட்டோகைனின் என்ற தாவர ஹார்மோன் உள்ளது. இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தினால் உண்டாகும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினால் உண்டாகும் சருமச்சுருக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
சைட்டோகைனின் புற்றுச்செல்கள் உருவாவதையும் தடை செய்கிறது. மேலும் பருக்கள், வடுகள் மீது இளநீரினை மேற்பூச்சாகப் பூசும்போது அவை விரைந்து ஆறி மறைந்து விடுகின்றன.
இளநீரானது சருமத்தை வறண்டுவிடாமல் ஈரப்பதத்துடன் இருக்கவும், அதேநேரத்தில் அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் படியவிடாமலும் பாதுகாக்கிறது.
கொட்டைகள் மற்றும் விதைகள் ஒவ்வாமை உள்ளவர்கள் இளநீரினைத் தவிர்க்கவும்.
இளநீரின் செயல்பாடானது இரத்த அழுத்தத்தில் வேறுபாட்டினை உண்டாக்கி விடக்கூடும் எனபதால் அறுவைசிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள் அறுவைசிகிச்சைக்கு இருவாரங்களுக்கு முன்பிருந்து இளநீரினைத் தவிர்த்துவிட வேண்டும்.
சிறுநீரக செயலிழப்பு கொண்டவர்கள் மருத்துவர்களைக் கலந்து ஆலோசித்து இளநீரை அருந்தவும்.
இளநீரானது அப்படியேவோ, சர்ப்பதாகவோ, பழச்சாறுடன் சேர்த்தோ உண்ணப்படுகிறது. சுமார் 4 மாதங்களுக்கு முன்புவரை தமிழகத்தில் நடைபெற்ற திருமணங்களின் வரவேற்பு விருந்திலோ, திருமணம் முடிந்த பின் நடைபெற்ற விருந்திலோ இளநீர் பாயாசம் வைப்பது வழக்கத்திற்கு வந்துவிட்டது.
செ ஏ துரைபாண்டியன்
Comments