திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு. M L A நிதியிலிருந்து 35 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு. M L A நிதியிலிருந்து 35 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர் ராஜமூர்த்தி தலைமை வகித்தார், மருத்துவமனை தலைமை டாக்டர் சிவகுமார் வரவேற்றார்,எம்எல்ஏ ஆடலரசன் தான் ஒதுக்கீடு செய்த நிதியிலிருந்து வாங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மல்டிபாராமீட்டர், ஸ்கேனர்கருவி, எமெர்ஜென்சிகட்டில், ரத்த அழுத்த பரிசோதனை கருவி, ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவமனை பயன்பாட்டிற்கு வழங்கினார். இதில் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பாண்டியன் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் பாலா திருத்துறைப்பூண்டி. படங்கள். மு. அமிர்தலிங்கம்
Comments