கேள்வி கேட்கும் திறன் கொண்ட சாக்கிரட்டீசு
கேள்வி கேட்கும் திறன் கொண்ட சாக்கிரட்டீசு
இத்தாலியின் பிசா நகரில் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பிறந்த கலிலியோ. மாபெரும் விஞ்ஞானி. அவர் சொன்ன கருத்துக்கள் மதவாதிகளால் எதிர்க்கப்பட்டு, வாழ்நாளின் இறுதியில் தண்டிக்கப்பட்டார் என்பதும் அவர் தெரிவித்த கருத்துக்கள் உண்மையானவை என்று தெரிவித்து அதற்காக சென்ற நூற்றாண்டில் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை எதிர்த்த மதத்தின் தலைவர் மன்னிப்பு கேட்டார் என்பதும் வரலாறு.
அவர் வாழ்ந்த காலத்திற்கு சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வாழ்ந்த முதல் பகுத்தறிவாதி ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) சாக்கிரட்டீசு (Socrates)
அவர் வாழ்க்கை வரலாற்றை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அவரது கருத்துக்களை அடிப்படையாக வைத்து,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ஓரடங்கு நாடகம், ராஜாராணி என்ற திரைப்படத்தில் கலைஞர் வசனத்தில் வெளியாகியது. அந்த நாடகக் காட்சிகளும் கருத்துக்களும் அவை தெரிவிக்கப்பட்ட விதமும் காலத்தினால் அழிக்க முடியாதவை.
சில அறிவியல் மற்றும் உண்மை கருத்துக்கள் எப்படி ஆட்சியாளர்களை அச்சமுறுத்தி, அதிகாரம் தங்கள் கையில் உள்ளது என்பதால், எதிர்க்கருத்துக்களை தெரிவிப்போரின் உயிரையே பறித்துள்ளது என்பதற்கு சாக்ரடீஸ் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இக்கால மாணவ மாணவியர், இளைஞர்கள் ஏன் வீட்டில் முடங்கியவர்களும் இரசிப்பீர்கள் என்ற நோக்கில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்திற்குள் சென்று பாருங்கள்
.
https://www.youtube.com/watch?v=sEipFRf3-8s
Comments