நடமாடும் தெய்வத்தை போற்றுவோம்

அன்னையர் தின கவிதைகள்



அன்னையர் தினம் இன்று
அன்றும் இன்றும் என்றும்
அயறாது நம் நலன் கருதும்
தெவிட்டாத அன்பு காட்டும்
தொல்லைகள் பல வந்தாலும்
இரும்பு இதயம் கொண்டு
இடர்களை நீக்கி
நம்மை நல்வழி படுத்தி 
நலமுடன் வாழ வைக்கும் 
நம் நலனே மூச்சாக பேச்சாக
தன் ஊன் வருத்தி
தன் உயிர் வருத்தி
நமக்கு உயிர் தந்த நம் 
நடமாடும் தெய்வத்தை போற்றுவோம்
நலம் பெற வழிபடுவோம்
நித்தம் செய்ய வேண்டிய இந்த
நற்காரியத்தை இன்றேனும் செய்வோம்


நன்றி தாயே!!!.....!!!😘💖


#மஞ்சுளா யுகேஷ்.


//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


ஒரு இரவும்


நிலாவுக்கு சோறு


கிடைத்ததே இல்லை


இந்தா இந்தா


என்று சொல்லி


குழந்தைக்கே


எல்லாம் ஊட்டும் தாய்


நிலவுக்கும் வேண்டும்


ஒரு அம்மா.


 


#மஞ்சுளா யுகேஷ்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி