ராஜீவ் காந்தி நினைவை போற்றுவோம்
பிரதமர் இந்திரா ந்தி 1984, அக்டோபர் 31 ஆம் அன்று சுட்டுக்கொல்லப்பட்டபோது கல்கத்தாவில் இருந்த ராசீவ் காந்தி அன்றிரவே அவசர, அவசரமாக , இந்தியாவின் பிரதமராக காங்கிரஸ் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு உடனே 9 வது பிரதமராகப் பதவிப் பிரமானம் செய்து வைக்கப்பட்டார்.
இந்தியாவின் புகழ்பெற்ற மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலிலேயே ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர் களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்று, பலம் வாய்ந்த இலங்கை விடுதலைப் போராளிகளின் கோபத்திற்கு ஆளாகி, 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து மேலும் 18 பேர் பலியானர் என்பது வரலாறு.
அவர் பிறந்த நாளான ஆகஸ்டு, இருபதாம் நாளை இந்தியாவில் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.
செஏ துரைபாண்டியன்
Comments