சாதனை பெண் சௌமியா சுவாமிநாதன்
சௌமியா சுவாமிநாதன் (சுகாதாரம்) வாழ்க்கை
உலக சுகாதார அமைப்பின் துணை இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த பெண் மருத்துவர் சவுமியாக சுவாமிநாதன் மார்ச் 2019-ல் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றாக கருதப்படும் உலக சுகாதார அமைப்பின் துணை இயக்குனர் பதவிக்கு தற்போது இந்தியா சார்பில் பெண் மருத்துவர் சவுமியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் டைரக்டர் ஜெனரலாக உள்ளார். சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனராகவும் பதவி வகித்தவர். காசநோய் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ துறையில் பிரபலமான இவரை பொது சுகாதாரம் மற்றும் உலக அளவிலான காசநோய் தடுப்பு பிரிவில் முக்கியமான பிரிவில் பணியாற்ற உலக சுகாதார அமைப்பு நியமனம் செய்துள்ளது. இந்த அமைப்பின் 2வது மிக உயரிய பதவியில் நியமிக்கப்படுள்ள மருத்துவர் சவுமியா சுவாமிநாதன், இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படும் பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் ஆவார்.
அவர் ஏற்கெனவே ஒரு பிரபலமான விஞ்ஞானியின் மகளாக இருப்பதால் நல்ல கல்வி கற்று, பல உயர் பதவிகளை வகித்து, இப்பொழுது இந்த உயர் பதவியைப் பெற்றுள்ளார் என்று யாராவது நினைத்தால் தமிழகத்தில் எங்கோ ஒருமூலையில் பிறந்து வளர்ந்து, புதுமுகங்களாக மாறி மாநிலத்தின் சாதனைப் பெண்களாக மாறிய பெண்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டில் அதிகம் நிகழ்ந்துள்ளது என்பதையும் தங்களின் உழைப்பு, விடாமுயற்சி உள்ளிட்டவற்றால் தாங்கள் சார்ந்த துறைகளான சமூக சேவை, சுகாதாரம், விளையாட்டு, கல்வி, பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கி தங்களுக்கு மட்டுமல்லாது,
தாங்கள் சார்ந்துள்ள தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடித்தந்துள்ள சில சாதனை பெண்கள் குறித்து மற்றவர்களுக்கு ஊன்றுகோலாக, நம்பிக்கை வளர்ப்பதாக இருக்கும் என்பதால் முன்னேற்ற மாறுதலுக்காக இத்தொடரில் சிலரைப் பற்றி குறிப்பிட விரும்புகிறோம்..
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் 10 வீதம் இச்செய்தியைப் பரப்பினால், நாம் பிறந்த மண்ணுக்கு செய்யும் சேவையாக்க் கருதலாம் என்ற கதுருத்தினைப் பதிவு செய்கிறோம்.
. செ ஏ துரைபாண்டியன்
Comments