மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், சமூக நீதி வழங்க வேண்டும்

ஆசிரியர்கள் நியமனத்தில் ஐகோர்ட் தீர்ப்பு : ராமதாஸ் வரவேற்பு


21-05-2020  23:50


சென்னை : 'முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், சமூக நீதி வழங்க வேண்டும் என்ற, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:'தமிழக அரசு பள்ளிகளுக்கு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ததில், இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளன. அதனால், பாதிக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு, சமூக நீதி வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.அந்தத் தீர்ப்பு செல்லும் என, இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. இது, சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி.ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை, அப்பதவியில் இருந்து மாற்ற வேண்டும்.

அரசு பணி தேர்வாணையங்களில், சமூக நீதிக்கு ஆதரவான அதிகாரிகளை பணியமர்த்தி, சமூக நீதி முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


 


செஏ துஐரபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி