இங்கிலாந்தில் ஏப்ரலில் வேலையின்மை 70 சதவீதம் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு: இங்கிலாந்தில் ஏப்ரலில் வேலையின்மை 70 சதவீதம் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்தில் வேலையின்மை 70 சதவீதம் அதிகரித்துள்ளன.
19-05- 2020 17:50
லண்டன்
இங்கிலாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் வாரத்தை உள்ளடக்கி மார்ச் இறுதி வரை 2020 ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான வேலையின்மை புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட் டுள்ளன.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மார்ச் மாதம் 23ம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தார். தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளவிவரங்களின்படி, 2020 ஆம் ஆண்டு மார்ச் வரை முதல் மூன்று மாதங்களில் வேலையின்மை 50,000-ல் இருந்து 13.5 லட்சமாக அதிகரித்துள்ளது.
மார்ச் மாதத்தில் சுமார் 13.5 லட்சத்தில் இருந்து சுமார் 33 லட்சமாக உயர்ந்துள்ளது - இது நிதி நெருக்கடியை அடுத்து 2011 அக்டோபரில் முந்தைய உச்சநிலையான 27 லட்சங்களை விட அதிகமாக உள்ளது
இங்கிலாந்தில் வேலையின்மை கோரிக்கைகள் 856,500 இல் இருந்து 20.97 லட்சமாக உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளி விவரங்களுக்கான அலுவலகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் வேலையின்மை விகிதம் ஜனவரி-மார்ச் கால கட்டத்தில் 3.9 சதவீதமாக ஆக சற்று உயர்ந்தது, இருப்பினும் அந்தக் காலம் ஊரடங்கின் ஒரு வாரத்தை மட்டுமே உள்ளடக்கியது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்தில் வேலையின்மை 70 சதவீதம் அதிகரித்துள்ளன
முதல் வார கட்டுப்பாடுகளை மட்டுமே உள்ளடக்கும் அதே வேளையில், கொரோனா தொழிலாளர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்று தரவுகளை வெளியிட்ட தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் ஜொனாதன் அதோவ் கூறினார்.
மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்பு நன்றாக இருந்தது, ஆனால் மார்ச் மாத இறுதியில், குறிப்பாக விருந்தோம்பல் மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் வேலை நேரம் கடுமையாக வீழ்ச்சியடைந்தது.ஏப்ரல் மாதத்தில், வேலைவாய்ப்பு வீழ்ச்சியடைவதற்கான அறிகுறிகள் இருந்தன.
நிறுவனங்களின் ஊதிய பட்டியலில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைவதை வரி தரவு காட்டுகிறது. மேலும் காலியிடங்களும் கடுமையாகக் குறைந்துவிட்டன, காலியிடங்களும் மிகக் குறைந்துவிட்டன, விருந்தோம்பல் மீண்டும் கடும் வீழ்ச்சியடைந்தது என குறிப்பிட்டுள்ளார். விருந்தோம்பல் துறை என்பது, தங்குவது, உணவு சேவைகள், பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு விளையாட்டு அம்சங்கள் கலந்த ஒரு கலவையாகும். அடிப்படையாக இத்துறையில் 3 பிரிவுகள் உள்ளன. அவை, ஓட்டல்கள், பயணம் மற்றும் சுற்றுலா, உணவகங்கள் மற்றும் கிளப்புகள் ஆகும்.
செஏதுரைபாண்டியன்
Comments