சாஸ்தா குழுமம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பிள்ளை பெருமாள் சொந்த செலவில் 600 குடும்பங்களுக்கு காய்கறிகள் வழங்கினார்
விருத்தாசலம் அருகே ஆலிச்சகுடி ஊராட்சியில் சாஸ்தா குழுமம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பிள்ளை பெருமாள் சொந்த செலவில் 600 குடும்பங்களுக்கு காய்கறிகள் வழங்கினார்
கொரோனா நோய் அச்சுறுத்தல் காரணமாக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் பொது மக்களின் வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டு வரும் மக்களுக்கு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா ஆலிச்சிகுடி ஊராட்சியில் சுமார் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு சாஸ்தா குழுமம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பிள்ளை பெருமாள் தனது சொந்த செலவில் 1 -லட்சம் மதிப்புள்ள காய்கறிகள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கருவேப்பிலங்குறிச்சி உதவி ஆய்வாளர் விநாயக முருகன் வழங்கினார் இதில் சாஸ்தா குழுமத்தின் பொறியாளர்கள் முருகவேல், சக்திவேல், வழக்கறிஞர் பழனிவேல் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பு செல்வகுமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பீப்பிள்டுடே செய்திகளுக்காக. கடலூர் செய்தியாளர். காமராஜ்
Comments