விளக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்து வரும் 204 மாணவ, மாணவிகளின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்து வரும் 204 மாணவ, மாணவிகளின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரானா வைரஸ் காரணமாக நாடு முழுவதும்144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பல்வேறு தரப்பினரும் வருமானமின்றி தங்கள் வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்து வரும் 204 மாணவ, மாணவிகளின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியர் கமலா, ஊராட்சி தலைவர் தனலெட்சுமி ஆகியோர் மாணவ, மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ 500 மதிப்பிலான அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கொரானா விழிப்புணர்வு உறுதிமொழிகளை மாணவர்கள் ஏற்று கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசியர் கழக தலைவர் பாஸ்கர், துணைத்தலைவர் சீராளன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரண்யா, உலகநாதன், மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி. படங்கள். மு. அமிர்தலிங்கம்
Comments