கொரோனாவால் இறந்தோர் பெயரை முதல் பக்கத்தில் வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ்
கொரோனாவால் இறந்தோர் பெயரை முதல் பக்கத்தில் வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ்!
25-05-2020 06:31
வாஷிங்டன் : அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் இதழ், ஞாயின்றன்று தனது முதல்பக்கத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஆயிரம் பேரின் பெயர்களை குறிப்பிட்டு, 'கணக்கிடா முடியாத இழப்பு' என குறிப்பிட்டுள்ளது.
எல்லா விஷயத்திலும் உலகின் நம்பர் ஒன் நாடாக மதிக்கப்படும் அமெரிக்காவில், கொரோனா பரவல் அடங்கவில்லை. லட்சம் பேர்மரணம் அடைந்தும் மக்களின் வாழ்க்கை முறை மாறவில்லை. பாதிப்பு, பலி எண்ணிக்கைகளை மீடியா உடனுக்குடன் வெளியிடுகிறது. ஆனால் அதெல்லாம் வெறும் நம்பர் என்று கருதி, கடந்து செல்லும் அளவுக்கு மக்களின் மனம் மரத்து போய்விட்டதாக குமுறியது நியுயார்க் டைம்ஸ் நாளிதழ். உணர்ச்சி அற்றுப் போன மக்களுக்கு சூடு வைக்கும் விதமாக ஒரு காரியம் செய்தது. இறந்தவர்களின் பெயர்களை முதல் பக்கத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்தது. வெறும் பெயரோடு நிறுத்தவில்லை. அந்த நபர் எப்படி பட்டவர் என்பதை ரத்தின சுருக்கமாக சொல்லி, வாசகர் மனதில் வேகமாக ஒரு சித்திரத்தை வரைந்து ஒட்ட வைத்தது. வாசிப்பவர்கள் நிச்சயமாக ஓரிரு இடங்களில் ஒரு சொட்டு கண்ணீரை அஞ்சலியாக செலுத்தாமல் இருக்க முடியாது.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா தொற்றால் வீட்டில் இறந்தவர்கள் அல்லது சில காரணங்களால் சேர்க்கப்படாதவர்களை கணக்கிடும் போது கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்குமென நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த சில மாதங்களாக நீடிக்கும் தொற்றால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், இது குறித்து டைம்ஸ் நாளிதழ் ஆசிரியர் மற்றும் நிருபர்கள் பேசியுள்ளனர். 'அந்த எண்ணைக் கணக்கிட முயற்சிக்க ஏதாவது வழி இருக்க வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம். இது சிறிய சோர்வை ஏற்படுத்தியது' என டைம்ஸ் கிராபிக்ஸின் உதவி ஆசிரியர் சிமோன் லாண்டன் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ஊரடங்கு நாட்கள் முதல் வாரங்கள் வரை நீடித்திருப்பதால், ஒரு குறிப்பிட்ட அளவு உணர்வற்ற நிலை உருவாகியுள்ளது. எண்களைப் புரிந்துகொள்வது கடினம். எனவே அமெரிக்கா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,000 பேரின் பெயர்களையும், அவர்களது விவரங்களையும் டைம்ஸ் சேகரித்தது. 'இதில் உள்ள 1,000 பேர் எண்ணிக்கையில் உயிரிழந்த ஒரு சதவீதம் பேரை மட்டுமே பிரதிபலிக்கிறார்கள். எதுவும் வெறும் எண்கள் அல்ல' என டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் பெயர், வயது மற்றும் அவர்கள் யார் என்பதை சுருக்கமாக குறிப்பிட்டுள்ளனர்.
உதாரணமாக, ஏஞ்சலின் மைக்கேலோபுலோஸ் (92), 'ஒருபோதும் பாடவோ நடனமாடவோ பயப்படாதவர்' லிலா ஃபென்விக் (82), 'ஹார்வர்டு சட்ட பல்கலையில் பட்டம் பெற்ற முதல் கருப்பு பெண்' இன்று வரையிலான தொற்றுநோய் பாதிப்பு குறித்து 'தி ஹ்யூமன் டோல்' என்ற கட்டுரையில் மூத்த எழுத்தாளரான டான் பாரி 'கற்பனை செய்து பாருங்கள். புத்தாண்டு தின கொண்டாட்டத்திற்கு இங்கு 1 லட்சம் பேர் கூடியிருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் அமெரிக்க வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டுள்ளனர்' என தெரிவித்துள்ளார்.
தகவல்
Comments