மனம் திறந்து

வணக்கம் வாசகர்களேளே 
 பீப்பிள்டுடே இணைய இதழ் 2019 செப்டம்பர் திங்கள் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது தனது 7வது திங்களில் தங்களது ஆதரவுடன் நடைபோட்டு வருகிறது.
முதலில் செய்திகளை மட்டும் வழங்கிய நாங்கள் புது முயற்சியாக 
தீபாவளி மலரை வழங்கினோம்.
தற்போது பல் சுவையான கட்டுரைகள்  ,கவிதை, சிறுகதை,மருத்துவம் ,சமையல்.சினிமா,விளையாட்டு ,ஆன்மிகம் போன்றவைகளை 24X7 மணி நேரமும் வழங்கி வருகிறோம்
எங்களது இணைய பத்திரிகைக்கு நண்பர்களாகிய நீங்கள் பல நல் படைப்புகளை வழங்கி எங்கள் பத்திரிகையை கௌரவித்து வருகிறீர்கள்.நண்பர்களுக்கு மிகவும் நன்றி
இணைய இதழ் ஆரம்பத்தில் மிக  சொற்ப  எண்ணிகையில் தான் பார்வையாளர்கள். பார்வையிடுவதும் மிக குறைவாக இருந்தன
 தற்போது  12.4.2020 அன்று எங்களது இதழ் 50000 பார்வையிடுதல்களை பெற்றுள்ளது
மிக குறுகிய காலத்தில் இவ்வளவு பார்வைகளை பெற்றது
தங்களை போன்ற அரிய வாசகர்களாலும் மற்றும் நண்பர்களின் படைப்புகளாலும்தான்
எங்களது வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த தங்களுக்கும்,படைப்பாளர் நண்பர்களுக்கும் ,எங்களது
செய்தியாளர்கள் மற்றும் புகைப்படகாரர்களுக்கும்.அவ்வப்போது கருத்துகளையும் ஆலோசனைகளை வழங்கும் 
அனைத்து மூத்த நண்பர்களுக்கும் மற்றும் எங்கள் பத்திரிகையை தேர்ந்தெடுத்து இலவசமாக இணையபக்கங்களை வழங்கிய
நவலேகா கூகுள் அமைப்புக்கும் மிகவும் நன்றி
தொடர்ந்து தங்கள் ஆதரவுகளுடன் ஒரு நல்ல இணைய பத்திரிகையாக எங்களது பீப்பிள் டுடே திகழும் என நம்புகிறோம்
https://peopletoday.page/
 வணக்கம்
நன்றி
சத்யநாரயணன்  ஆசிரியர்.
உமாகாந்தன் சிறப்பு ஆசிரியர்
பீப்பிள் டுடே


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி