புத்தாண்டு லட்சுமி வழிபாடு

புத்தாண்டு லட்சுமி வழிபாடு


* ; ஸ்ரீதனலட்சுமி - போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பெறலாம்.


 ; ஸ்ரீவித்யாலட்சுமி - யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.


 ; ஸ்ரீதான்யலட்சுமி - தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான்யலட்சுமியின் அருளை பெறலாம்.


 ; ஸ்ரீவரலட்சுமி - செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும். 


; ஸ்ரீசௌபாக்யலட்சுமி - பிறர் மனது நோகாமல் நடந்தால் சௌபாக்கிய லட்சுமியின் அருளைப் பெறலாம். ;


ஸ்ரீசந்தானலட்சுமி - தாயன்புடன் ஸ்ரீசந்தானலட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு. ;


ஸ்ரீகாருண்யலட்சுமி - ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்தால் ஸ்ரீகாருண்யலட்சுமியின் அருளைப் பெறலாம். ; ஸ்


ரீமகாலட்சுமி - பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஸ்ரீமகாலட்சுமி பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள். ;


ஸ்ரீசக்திலட்சுமி - நம்பிக்கையுடன் ஒரு வேலையை செய்தால் ஸ்ரீசக்திலட்சுமி சக்தியைக் கொடுப்பாள். 


; ஸ்ரீசாந்திலட்சுமி - ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்


; ஸ்ரீசாயாலட்சுமி - பலனை எதிர்பாராமல் ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும். ;


ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி - பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம். ;


ஸ்ரீசாந்தலட்சுமி - பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்


; ஸ்ரீகீர்த்திலட்சுமி - நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால் ஸ்ரீகீர்த்திலட்சுமியின் அருள் கிடைக்கும்


; ஸ்ரீவிஜயலட்சுமி - விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள். ;


ஸ்ரீஆரோக்கிய லட்சுமி - கோபம், பொறுமை, பேராசை போன்றவற்றை நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கியலட்சுமியை வணங்க வேண்டும்


. புத்தாண்டில் லட்சுமியை வழிபட்டு மனத்திற்கினிய வாழ்க்கை அமைய பிரார்த்திப்போம்!!...


மஞ்சுளாயுகேஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி