அதிக வெப்பம், சூரியஒளி, ஈரப்பதமான சூழலில் கரோனா பரவுவது கடினமாகும்
அதிக வெப்பம், சூரியஒளி, ஈரப்பதமான சூழலில் கரோனா பரவுவது கடினம்
உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கரோனா வைரஸ், சூரிய ஒளி, அதிகமான வெப்பம், ஈரப்பதமான சூழல் ஆகியவற்றில் பரவுவது கடினம். இந்த சூழல் அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது
அமெரி்க்க அரசின் உள்துறை அமைச்சக்தின் கீழ் வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் கரோனா பரவல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின்படி இதனை அமெரிக்க உள்துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைமை இயக்குநர் பில் பிரையன் நேற்று வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தபோது அவர்
'அதிகமான சூரிய வெளி, வெப்பம், ஈரப்பதமான சூழல் இருந்தால் கரோனா வைஸ் வேகமாக உயிரிழக்கும், பரவும் வேகமும் குறையும். அதிலும் நேரடியான சூரிய ஒளியில் வேகமாக கரோனா வைரஸ் உயிரிழக்கும். ஐஸோபுரோபைல் ஆல்கஹால் கரோனா வைரஸை 30 வினாடிகளில் கொல்லும் திறன்படைத்தது.
எங்களின் சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட படி, சூரிய ஒளி படும்போதும், வெயில் அதிகரிக்கும் போதும் தரைத்தளத்திலும், காற்றிலும் கரோனா பரவும் வேகம் குறைந்து கரோனா வைரஸ் அழிந்து உயிரிழப்பும் குறையும். இதேபோன்ற சூழல்தான் அதிகமான வெப்பம், ஈரப்பதமான சூழிலும் கரோனா வைரஸ் அதிகமாக அழியும்.இந்த 4 சூழலும் இருந்தால் கரோனா வைரஸ் பரவும் வேகம் குறையும். இவை இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது.
குறிப்பாக கோடைகாலம் இருக்கும் நாடுகளில் கரோனா வைரஸ் பரவும் வேகம், ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு பரவுவதும் குறையும். இது எங்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பு.
அதாவது சூரிய ஒளி, வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் செல்லும் போது கரோனா வைரஸ் உயிர்வாழும் காலம் பாதியாகக் குறையும். அதேபோல ஈரப்பதமான சூழலும் இருந்தால் வழக்கமாக தரைத்தளத்தில் 18 மணிநேரம் வாழும்தன்மை கொண்டகரோனா வைரஸ் சில நிமிடங்களில் இறந்துவிடும்.
அதிகமான சூரிய ஒளி, 75 பாரன்ஹீட் வெப்பம், 80 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் கரோனா வாழும் காலம் 18 மணிநேரத்திலிருந்து 6 மணிநேரமாகக் குறையும், சில நிமிடங்களிலும் கரோனா வைரஸ் உயிரிழக்கலாம். இயற்கை அழிக்கும் வழிகள் இருந்தாலும் நாம் கரோனா வைரஸ் காலத்தில் சமூக விலகலையும், முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகும்
.
70 முதல் 75 பாரன்ஹீட் வெப்பமும் 20 சதவீதம் ஈரப்பதமும் இருந்தாலே கரோனா வைரஸின் ஆயுள்காலம் பாதியாகக் குறைந்துவிடும். அதேபோல யு.வி. கதிர்களும் கரோனா வைரஸ் பரவும் சங்கிலியை உடைக்கும் திறன் படைத்தவை.
95 பாரன்ஹீட் வெப்பம் இருந்தால் கரோனா வைரஸ் ஆயுள் வெறும் 60 நிமிடங்கள் மட்டுமே. இந்த ஆய்வுகள் அனைத்தும் மேரிலண்டில் உள்ள டிஹெச்எஸ் அதிநவீன ஆய்வுக்கூடத்தில் செய்யப்பட்டன. டிஹெச்எஸ் அதிநவீன ஆய்வுக்கூடம் அமெரிக்காவில் ஒன்று மட்டுமே இருக்கிறது.
மேலும், ஐஸோபுரோபைல் ஆல்கஹாலைப் பயன்படுத்தி கரோனா வைரஸ் இருந்த இடத்தை சுத்தப்படுத்தும்படுத்தும் போது சிலவினாடிகளில் வைரஸ் உயிரிழக்கும். ஒருவரின் எச்சில், நுரையீரல் சளியிலிருந்து எடுக்கப்பட்ட வைரஸை இந்த ஆல்கஹாலில் சோதிக்கும்போது அது சில வினாடிகள்கூட உயிர்வாழவில்லை.
பொதுவாக ப்ளீச்சிங் முறையில் வைரஸ் 5 நிமிடங்களுக்குள் கொல்லும், ஆனால், ஐஸ்ரோபில் ஆல்கஹாலைப் பயன்படுத்தினால் 30 வினாடிகள் கூட வைரஸ் உயிர்வாழாது. குறிப்பிட்ட அந்த இடத்தை தேய்த்து கழுவவோ, அல்லது மனித உழைப்போ தேவையில்லை.'
இ்வ்வாறு பிரையன் தெரிவித்தார்
தகவல் விநோத்
Comments