உலகின் மிகக் கொடிய நச்சுத் தன்மையுள்ள பூச்சி

உலகின் மிகக் கொடிய நச்சுத் தன்மையுள்ள பூச்சி


 


தற்போது உலகில் கண்ணுக்குத் தெரியாத  மிகக் கொடிய தொற்றுநோய்க் கிருமியின் பரவலை நாம் சந்தித்து, பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறிகொடுத்து, இலட்சக் கணக்கில் மருத்துவ மனைகளில் தஞ்சம் புகுந்து அச்சத்துடன், ஊரடங்கை சந்தித்து வருகிறோம்.   இந்நிலையில் 


உலகின் மிகக் கொடிய நச்சுத் தன்மையுள்ள பூச்சி  என்ற தலைப்பைப் பார்த்ததும் அது எங்கோ ஊசியிலைக் காடுகளிலோ அல்லது மலைகளிலோ இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அந்த யூகம் தவறு.


மிகக் கொடிய நச்சுத் தன்மையுள்ள பூச்சி நம்மைச் சுற்றியும் இருக்க வாய்ப்பு உள்ளது.


முதலில் பூச்சி என்றால் என்ன?


6 கால்களும் 3 உடல் பாகங்களும் உடையதுதான் பூச்சி என்றழைக்கப்படுகிறது?  அது சரி.  அந்த மிகக் கொடிய நச்சு பூச்சி எது தெரியுமா?


எறும்பு.   ஆம் எறும்பேதான்.  ஆனால் நாம் சாதாரணமாக பார்க்கும் இந்த எறும்பு இல்லை.  அதன் பெயர் உறார்வஸ்ட் ஆன்ட்  என்றழைக்கப்படும் அறுவடை எறும்பு ஆகும்.  உருவத்தோடு, சதவீத அடிப்படையில் ஒப்பிடுகையில் ஒரு தேனிக்கு இருக்கும் நச்சுத் தன்மையை விட இவ்வகை எறும்புகளுக்கு அதிக நச்சுத்தன்மை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


 


செ ஏ துரைபாண்டியன்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி